பூண்டு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. உடலை ஆரோக்கியமாக்குகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு பூண்டு சாப்பிடுவது நல்லது என்பதை அறிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிக அளவு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்


ஆயுர்வேத நிபுணர் டாக்டர் அபிரார் முல்தானி இது குறித்து கூறுகையில், பூண்டு அதிகப்படியாக சாப்பிடுவதால், பக்க விளைவுகள் ஏற்படலாம். அதிக பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறிந்து கொள்ளுங்கள்.


பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் (Blood Thinner) பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானது.


பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.


பூண்டில் சல்பர் அதிகம் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


பூண்டின் அதிகப்படியான பயன்பாடு வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், பூண்டு அதிகமாக உட்கொள்வது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.


கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் அதிக பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஒரு நாளைக்கு எவ்வளவு பூண்டு சாப்பிட வேண்டும்?


சரியான அளவு பூண்டு பற்றி உறுதியான தகவல் இல்லை என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு நாளைக்கு 3 முதல் 6 கிராம் பூண்டு உட்கொள்வது ஒரு நபருக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், உங்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் பிரச்சனை ஏற்பட்டால், அதை உடனடியாக குறைத்து ஆலோசனைக்காக மருத்துவரை அணுகவும்.


இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR