Nutrition for men's health: ஒவ்வொருவரின் ஆரோக்கிய தேவையும் வித்தியாசமானது. ண்களை விட ஆண்களுக்கும் சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கின்றன. ஆண்களுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்ன, அவற்றின் பற்றாக்குறையால் அவர்களுக்கு என்ன நோய் வரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம். அவை:


இருதய நோய்
உயர் இரத்த அழுத்தம்
எலும்புகள் பலவீனமடைதல்
சோர்வு
உடல் பருமன்
தமனி வீக்கம்
இரத்த ஓட்டத்தில் பாதிப்பு


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


ஆண்களுக்கு மிகவும் தேவையான சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:


வைட்டமின் டி - வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் அவசியம். ஆனால் ஆண்கள் மட்டுமல்ல பெரும்பாலான  பெரும்பாலான பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. ஏனெனில், நமது வாழ்க்கை முறை காரணமாக, விட்டமின் டி சத்தின் ஆதாரமான சூரிய ஒளியை நாம் பெற முடியவில்லை. எனவே, வைட்டமின் டி பெற ஆண்கள் சால்மன், மீன், முட்டை, பால் பொருட்கள் மற்றும் காளான்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


மெக்னீசியம் - மெக்னீசியம் தாது உடலின் சுமார் 300 செயல்முறைகளுக்கு தேவையானது . அதன் குறைபாடு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பெரும்பாலான ஆண்களுக்கு மெக்னீசியத்தின் தினசரி தேவையில் 80 சதவிகிதத்தை மட்டுமே பெற முடிகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நேவி பீன்ஸ் மற்றும் ஹாலிபட் மீன் ஆகியவை மெக்னீசியத்தின் சிறந்த ஆதாரங்கள்.


வைட்டமின் பி 12 - வைட்டமின் பி 12 இறைச்சி, கோழி, முட்டை, மீன், சீஸ், தயிர், பால் போன்றவற்றிலிருந்து பெறலாம். உங்கள் உடலில் உள்ள வைட்டமின் பி 12 அளவை அறிய மருத்துவரை அணுகவும்.


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


பொட்டாசியம் - இந்த தாது உங்கள் செல்கள் குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலான ஆண்களுக்கு போதுமான பொட்டாசியம் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், பொட்டாசியம் உடலில் சோடியத்தின் விளைவைக் குறைக்கவும் உதவுகிறது. வெண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் பொட்டாசியம் கிடைக்கும்.


அயோடின் - தைராய்டு சுரப்பிக்கு டி 3 மற்றும் டி 4 ஹார்மோன்களை உற்பத்தி செய்ய அயோடின் தேவை. அதே நேரத்தில், இரண்டு ஹார்மோன்களும் கலோரிகளை எரிக்க உதவுகின்றன. உடலில் அயோடின் போதிய அளவு இல்லாததால் எடை அதிகரிப்பு மற்றும் அதிக சோர்வை ஏற்படுத்தும். முட்டை, பால் மற்றும் தயிர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் அயோடின் பெறலாம்.


இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR