உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது தான் இன்று பலரும் விரும்பும் முக்கியமான விஷயம். அதிலும், கொரோனா தொற்றுநோயால் வெளியில் செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் குறைந்திருக்கும் நிலையில் உணவே உடல் எடையை குறைக்கும் என்றால் அதை யார் தான் விரும்பமாட்டார்கள்? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி இடுப்பழகியாக சில உணவு குறிப்புகல் உங்களுக்காக…


கொட்டை நீக்கிய நெல்லிக்காயில் இருந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினசரி காலையில் குடித்து வந்தால் இடுப்பில் படிந்திருக்கும் கொழுப்பு குறையும்.


பாலில் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்,  உடல் இளைக்கும், இடுப்பு அழகாகும். அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும், மெடபாலிசம் அதிகரிக்கவும் சமையலில் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்தலாம். 


உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கலோரிகளை குறைக்க கிரான்பெர்ரி ஜூஸ் உதவும். அதேபோல ஊட்டச் சத்துக்கள் அதிகம் உள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அதிகம் உள்ளன. பித்தநீர் சுரக்க உதவும் கேரட் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும். 


Also Read | உடல் எடை குறைய Black Coffee-யா, Green Tea-யா? எது சிறந்தது?


புரதச்சத்து அதிகம் உள்ள யோகர்ட், மெடபாலிசம் அதிகரிக்க உதவும். உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் மெடபாலிசம் அதிகரிப்பதோடு, தசைகள் வலுவாகி, உடல் எடை குறைய உதவும்.


அதேபோல், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன. இவற்றில் வைட்டமின் C மற்றும் B அதிகம் உள்ளது. இவற்றை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்.


பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். இவற்றில் சர்க்கரை, கொழுப்புச்சத்து, உப்பு, கலோரிகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைவாக உள்ளன, இவற்றை தவிர்த்தாலே உடல் எடை கூடாமல் அழகை பராமரிக்கலாம்.


Also Read | உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR