Health Tips to include fibre in diet: நமது உடலுக்கு மிகவும் தேவையான விஷயங்களில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து.  நமது உணவில் சரியான அளவில் நார்ச்சத்து இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நார்ச்சத்து நம் உணவில் ஒரு இன்றியமையாத பகுதியாக இருக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நார்ச்சத்து நம் உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கின்றது. நார்ச்சத்து நம் உடலில்
- ஆரோக்கியமான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது
- இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது
- நீண்ட நேரத்திற்கு வயிற்றில் நிறைவான உணர்வை கொடுக்கிறது
- எடையை கட்டுக்குள் வைக்கிறது


நார்ச்சத்து (Fibre) பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான பொருட்களில் அதிக அளவில் காணப்படுகிறது. நம் உடலுக்கு தினசரி உணவில் எவ்வளவு நார்ச்சத்தை சேர்ப்பது சரியாக இருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும். 


நார்ச்சத்தின் தினசரி தேவை
- 50 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் - ஒரு நாளைக்கு 38 கிராம் ஃபைபர்
- 50 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் - ஒரு நாளைக்கு 30 கிராம் ஃபைபர்
- 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் - ஒரு நாளைக்கு 25 கிராம் ஃபைபர்
- 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் - ஒரு நாளைக்கு 21 கிராம் ஃபைபர்


பழங்கள் (Fruits) மற்றும் காய்கறிகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இவற்றை அதிக அளவில் உண்பதால், நான் நம் உடலில் நார்ச்சத்தின் அளவை சரியாக பராமரிக்கலாம். பொதுவாக நாம் உட்கொள்ளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நார்ச்சத்தின் அளவை இங்கே காணலாம்: 
- 1 பெரிய ஆப்பிள் = 4 கிராம்
- 1 பேரிக்காய் = 4 கிராம்
- 1 வாழைப்பழம் = 3 கிராம்
- 1 கப் சமைக்காத கேரட் = 4 கிராம்
- 1 கப் ஸ்ட்ராபெர்ரி = 4 கிராம்
- 1 கப் சமைத்த காலிஃபிளவர் = 3 கிராம்
- 2 கப் சமைக்காத கீரை = 3 கிராம்


ALSO READ: Summer Diet Tips: கோடையை குதூகலமாக்க குளு குளு டிப்ஸ் இதோ


காலை உணவில் தானியங்கள்:
உங்கள் காலை உணவில் முழு தானியங்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். வைட் பிரெட்டிற்கு (Bread) பதில் பிரவுன் பிரெட்டை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தானியங்கலில் சுவையை சேர்க்க சர்க்கரையைத் தவிர்த்து, பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். 


பருப்பு / சுண்டல் அதிகம் சாப்பிடுங்கள்:
வாரத்திற்கு இரண்டு முறையாவது 2 கப் சுண்டல் வகைகளை உட்கொள்ள வேண்டும். இவற்றில் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச்சத்தும் உள்ளன. கால் கப் ராஜ்மா தோராயமாக 3 கிராம் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. இதை வேகாய்த்து உண்பது அதிக நன்மை அளிக்கும். 


உலர் பழங்கள் மிகவும் பயன் தரும் 
கால் கப் பாதாம் பருப்பில் தோராயமாக நான்கு கிராம் நார்ச்சத்து உள்ளது. உங்கள் உணவில் வேர்க்கடலையைச் சேர்ப்பது உங்கள் உணவில் நார்ச்சத்தை சேர்க்க ஒரு சுவையான வழியாகும். அவற்றில் புரதமும் அதிகம் உள்ளன. வறுத்த உப்பு செர்த்த வேர்க்கடலையை முடிந்த வரை தவிர்க்கவும். அதையும் சேர்க்காமல் வறுத்த வேர்க்கடலையை உட்கொள்ளலாம். 


முழு தானியங்களை அதிகம் உட்கொள்ளுங்கள் 
"கோதுமை" அல்லது "மல்டிகிரெய்ன்" என விற்பனை செய்யப்படும் அனைத்து தயாரிப்புகளும் உண்மையில் அவ்வாறு இருப்பதல்ல. சரியான, கலப்படமில்லாத முழு தானியங்களை உங்கள் உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. இவற்றால் உடலுக்கு பலவிதன் நன்மைகள் நடக்கின்றன.


நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்வது உங்கள் செரிமான அமைப்பை (Digestion) ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சரியான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. ஒரு சீரான உணவு பழக்கத்துடன், வழக்கமான முழு உடல் ஆரோக்கிய பரிசோதனை உங்கள் சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும. இப்படி செய்வதால் உடலில் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் அதை சரிசெய்து கொள்ளலாம். 


ALSO READ: COVID-19: விரைவாக குணமடைய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில 'Tips' இதோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR