புதுடெல்லி: உலக அளவில் மனிதர்களின் மரணத்திற்கு காரணமான விஷயங்களில் இதய நோய் முக்கியமானது. உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இறப்புகளின் வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. இதய நோய் மற்றும் அதை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன, இதில் மரபணு, பரம்பரை, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த கொழுப்பு,  நீரிழிவு, ஆரோக்கியமற்ற உணவு, உடல் இயக்கம் குறைவு போன்றவை அடங்கும். நமது பல கெட்ட பழக்கங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உயிரிழப்பு என்ற ஆபத்தை அதிகரிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான இதயத்தையும் வலு இழக்கச் செய்யும் சில பழக்கங்கள் இவை. இவற்றைத் தவிர்த்தால், நாம் நமது இதயத்தைக் காதலிக்கிறோம் என்று அர்த்தம் ஆகும். இதயத்தை அன்பால் ஆரோக்கியமாக்க வழிவகுக்கும் சில ‘கெட்ட’ பழக்கங்கள் இவை. இவற்றுக்கு இன்றுடன் முழுக்கு போட்டுவிடுங்கள்.


மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


புகையிலை சிகரெட் பயன்பாடு
ஹார்ட் ரிதம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, புகையிலை புகைப்பதால் இதயக் குழாய்களில் பாதகமான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது, இதில் அரித்மியா ஏற்படும் அபாயம் அதிகம் என்று எச்சரித்துள்ளது.  
 
இ-சிகரெட்டின் பயன்பாடு
இ-சிகரெட் இதயத்திற்கும் பாதுகாப்பானது அல்ல. புகையிலை பயன்படுத்தப்படும் சிகரெட்டுகள் போன்ற தீங்கை இ-சிகரெட்டும் ஏற்படுத்தும் என்று UCSF ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.  
 
மரிஜுவானா பயன்பாடு
அதே ஆய்வில், மரிஜுவானா சிகரெட்டிலிருந்து வரும் புகையின் வெளிப்பாடு இதய செயல்பாட்டை மோசமாக்குகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கணுமா? இந்த ஜூஸ் குடிச்சா போதும் 
 
அதிகப்படியான ஆல்கஹால் 
அதிகப்படியான மது அருந்துதல் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்து ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்..
 
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணுதல்
கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக, நிறைவுற்ற கொழுப்பு, வெண்ணெய், மனீர், பாலாடைக்கட்டி மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற உணவுகளில் காணப்படும் ஒரு வகை உணவுக் கொழுப்பு, இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது.  


தூக்கமின்மை
போதுமான தூக்கம் இல்லாமல் போவது அல்லது ஆழ்ந்த உறக்கம் இல்லாதது ஆகியவை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | பேலியோ டயட்டால் அதிகரித்த நீரிழிவு! நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ