Hemoglobin: ஹீமோகுளோபினை அதிகரிப்பது அசைவ உணவுகளா இல்லை சைவமா? ஆச்சரியம் தரும் முடிவுகள்
Iron Deficiency: ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இரும்புச்சத்து நமக்கு முக்கியமானது. நமது உடலில் போதுமான இரும்பு அளவை பராமரிக்க வேண்டியதற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
மனித உடல் பல ஊட்டச்சத்துக்களால் ஆனது. எந்தவொரு ஊட்டச்சத்து குறைபாடும் உடலில் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது. இரும்புச்சத்து குறைபாடு உடலில் பல நோய்களை உண்டாக்கும். பெண்கள் பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இரும்புச் சத்து குறைபாட்டால், உடலில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டு, ரத்த சோகை போன்ற ஆபத்தான நோயை சந்திக்க வேண்டியுள்ளது.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் என்னவென்று தெரிந்துக் கொள்வோம்.
இரும்புச்சத்துத் தேவை அதிகரிப்பு: குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கர்ப்பம், பாலூட்டுதல் என பெண்களுக்கு வளர்ச்சி மற்றும் குழந்தைப் பேறு, மாதவிடாய் என பல காரணங்களால் இரும்புச்சத்து ஆண்களைவிட அதிகம் தேவைப்படுகிறது.
உணவு உட்கொள்ளல்: உலகம் முழுவதும் மிகவும் காணப்படும் இரும்புச் சத்துப் பற்றாக்குறைக்கான காரணம் என்னவென்றால் போதுமான அளவு இரும்புச்சத்துள்ள உணவுகளை உண்ணாதது தான். பொதுவாக வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள், தானியங்கள் மற்றும் பால் அதிகமாகவும், இரும்புச்சத்து குறைவாகவும் இருக்கும். மக்கள், குறிப்பாக பதின்ம வயதினர், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்ளும் நபர்களும் இரும்புச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இரத்த இழப்பு: அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப் புண்கள், மூல நோய் என நோய்கள் காரணமாகவும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்.
இவற்றைத் தவிர, உடல் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைவது, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பு இல்லாமை உட்பட பல்வேறு காரணங்களும் உடலில் இரும்புச்சத்து குறைவாவதற்கு காரணமாகிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்களின் உணவில் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுவதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து
குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு
வளரும் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு கற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தும். ஏனென்றால், வளரும் குழந்தைகளில் நரம்பு மண்டலம், பிறரை விட கணிசமாக அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறது, மேலும் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதில் இரும்புச்சத்து முக்கியமானது. உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது, அது ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கும்
குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு அதிகரித்தால், அதனால் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
உடல் வளர்ச்சி தாமதம்
மெதுவான மன வளர்ச்சி - குறைந்த IQ, நினைவாற்றல் குறைவு மற்றும்
நடத்தை சிக்கல்கள் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.
இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுதல்
ஹீம் இரும்புச்சத்து (heme iron) (விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகள்) ஹீம் அல்லாத இரும்புச்சத்தை (nonheme iron)(தாவரங்களிலிருந்து) விட உடலால் நன்றாக உறிஞ்சப்படுகிறது.
இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால், இதய நோய், நோய்த்தொற்றுகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால், உடலில் இரும்புச்சத்து அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இரும்புச்சத்து அதிகமாக இருப்பது ஆண்களுக்கு மிகவும் பொதுவானது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் பிரச்சனையா? அதிக கொழுப்பையும் சட்டுன்னு குறைத்து கரைக்கும் பழத்தோல்
உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை உணவு தான் என்பதால் உணவில் மாற்றம் செய்வதன் மூலம் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கலாம். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தாத சூப்பர்ஃபுட்களை பற்றி தெரிந்துக்க் கொள்ளுங்கள்
1. முந்திரி
உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிட வேண்டும். முந்திரி பருப்பை அளவுடன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அபாயம் இல்லை மற்றும் இரும்புச்சத்து குறைபாடும் ஈடுசெய்யப்படுகிறது.
2. பட்டாணி
தினமும் பட்டாணி சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து குறைபாடு சீராகும். 100 கிராம் பட்டாணியில் 1.5 மி.கி இரும்புச்சத்து உள்ளது. தினமும் பட்டாணி சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து கிடைக்கும்.
3. கருப்பு எள்
உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை எள்ளுடன் ஒப்பிடும்போது, கருப்பு எள்ளில் அதிக இரும்புச்சத்து காணப்படுகிறது.
4. திராட்சை
உலர் பழங்களில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க விரும்பினால், தினமும் திராட்சையை உட்கொள்ளத் தொடங்குங்கள். திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வயிறு தொடர்பான அனைத்துக் கோளாறுகளையும் போக்கும் மணத்தக்காளிக் கீரையின் அற்புதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ