நோய்கள் எதுவும் உங்க பக்கம் வரவே வராது.. உத்திரவாதம் கொடுக்கும் சில மூலிகை டீ வகைகள்
காலையில் முதலில் அருந்தும் பானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பாலில் கலந்து தயாரிக்கப்படும் டீ மற்றும் காபி நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதற்கு பதிலாக சில மூலிகை டீ வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆரோக்கியத்திற்கு, உணவு பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் காலையில் முதலில் அருந்தும் பானம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். பாலில் கலந்து தயாரிக்கப்படும் டீ மற்றும் காபி நிச்சயமாக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதற்கு பதிலாக சில மூலிகை டீ வகைகளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில மூலிகை டீ வகைகள்
கிராம்பு டீ
காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு டீ குடிப்பதால், வளர்சிதை மாற்றத்தை துரிதமடைந்து செரிமான அமைப்பு வலுவடையும். இதனால் உடல் பருமன் குறையும். கிராம்புகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தண்ணீரில் கரைந்து உடலைச் சென்றடைந்து பல நன்மைகளைத் தருகின்றன. கிராம்புகளில் காணப்படும் யூஜெனால் என்னும் பொருள் கல்லீரல் அலர்ஜி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்களை குணமாக்கும்.
கெமோமில் டீ
கெமோமில் டீ குடிப்பதால் மனம் ரிலாக்ஸ் ஆகும். . கெமோமில் டீ மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, கெமோமில் டீ மகிழ்ச்சி ஹார்மோன்களை தூண்டும் ஆற்றல் கொண்டது. இந்த டீயை இரவில் தூங்கும் முன் குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
செம்பருத்தி டீ
செம்பருத்தி டீ உடல் பருமனை குறைக்க உதவுவதோடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. யூரிக் அமில அளவைக் குறைக்கவும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் இந்த டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. சுத்தம் செய்து நிழலில் காயவைக்கப்பட்ட செம்பருத்தி பூ இதழ்களை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்தால் செம்பருத்தி டீ ரெடி.
இஞ்சி டீ
இஞ்சி டீ கொலஸ்ட்ராலை குறைப்பது முதல், உடல் எடையை குறைப்பது வரை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதனை குடிப்பதால் உடல் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கீல்வாத நோயாளிகளுக்கும் இஞ்சி டீ நன்மை பயக்கும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, இது வீக்கத்தைக் குறைக்கிறது. இஞ்சி டீ குடிப்பதால் வாந்தி, குமட்டல் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்து... நோயாளியாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்
புதினா டீ
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் பருவ கால நோய்களை தடுக்க உதவும் புதினா டீ செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மைக்ரைன் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. புதினா டீ உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது. வெந்நீரில் புதினா இலைகளை சேர்த்து, அதனுடன் தேன் அல்லது வெல்லம் சேர்த்து அருந்தலாம்.
பிளாக் டீ
பிளாக் டீயில் அதிக காஃபின் உள்ளது. எனவே, இந்த டீ குடிப்பதால் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். பிளாக் டீயில் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, இது உடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கிறது. இந்த டீ நமது குடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பிளாக் டீ தயாரிப்பது மிகவும் எளிது, இதற்கு தேயிலை இலைகள், கரு மிளகு, கிராம்பு ஆகியவற்றை 1 கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். விரும்பினால் தேன் சேர்த்தும் குடிக்கலாம்.
கிரீன் டீ
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த டீயை குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயமும் குறைகிறது. இந்த டீ குடிப்பதால் உடல் எடை குறையும். அதன் வழக்கமான நுகர்வு கொழுப்பு எரிக்க உதவுகிறது. இதை குடிப்பதால் அறிவாற்றல் செயல்பாடுகளும் மேம்படும். கூடுதலாக, கிரீன் டீ குடிப்பது பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் பருமனால் ஆண்களுக்கு வரும் அபாயகரமான நோய்கள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ