பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முடி வெடிப்பு-3 பிரச்சனை..ஒரே தீர்வு! ‘இதை’ செய்யுங்கள்!
Hair Care Tips Tamil: பலருக்கு முடி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் நிறையவே இருக்கும். இவற்றிற்கு வீட்டு வைத்தியங்கள் பல உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
How To Cure Hair Fall, Dandruff, Split Ends Hair Care Tips: உச்சந்தலை பிரச்சனையும் முடி பிரச்சனையும் பாடாய் படுத்துகிறதா? இதை சரி செய்ய பலர் லட்ச லட்சமாய் செலவு செய்கின்றனர். அவை பல சமயங்களில் வெற்றியில் போய் முடியலாம் அல்லது தோல்வியும் அடையலாம். இதனால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் 41 தாவரங்கள் பலவித முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பாலான தாவரங்கள் எண்ணெய் மற்றும் ஷாம்பூவிற்காக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றால் தலையில் பேன்களும், பொடுகுகளும் வருகின்றன.
முடிக்கு நன்மை பயக்கும் தாவரங்கள்:
முடிக்கு நன்மை பயக்கும் பொருட்களுள் ஒன்று நெல்லிக்காய். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி சத்துகளும் நிறைந்துள்ளன. இது முடியின் ஆழம் வரை சென்று அதற்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
நெல்லிக்காயை போலவே முடிக்கு ஊட்டமளிக்கும் இன்னொரு தாவரம், வெந்தயம் ஆகும். இதில் பல வகையான புரத சத்துகளும் நிகோட்னிக் அமிலம் ஆகியவையும் உள்ளன. இது, முடி உடைதலையும் முடி அடர்த்தி குறைவதையும் தவிர்க்கும். இதனால் முடி புசுபுசுவென வளர்ந்து, பளபளப்பாக மாறும். இதற்காக கரிவேப்பிலையையும் உபயோகிக்கலாம். இதை உபயாேகிப்பதனால், இளநரையை தவிர்த்து முடி உதிர்வதை தவிர்க்கும்.
உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது:
வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம் முடியின் வேர், போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை உறுதி செய்கிறது. இது நல்ல முடி வளர்ச்சியை மேலும் நன்கு பராமரிக்க உதவும்.
முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது:
நெல்லிக்காய், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை முடி உதிர்வை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன. முடியின் வேர்களை வலுப்படுத்துவது முதல் முடி உடைவதை தடுப்பது வரை, முடி உதிர்தலுக்கான அடிப்படைக் காரணங்களை இந்த தாவரங்கள் காண்பிக்கின்றன.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் வேகமாக குறையணுமா... இதையெல்லாம் சாப்பிடுங்க!
ஊட்டச்சத்து அளிக்கும்:
இந்த தாவரங்களில் வைட்டைன் சத்துகள், மினரல் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் சத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. முடிக்கு தேவையான ஊட்டமளிக்கும் இந்த தாவரங்கள் முடியை வலுவாக்க உதவும்.
எப்படி உபயோகிக்க வேண்டும்?
தேங்காய் எண்ணெயில் துருவிய நெல்லிக்காய் மற்றும் வெந்தையத்தை பவுடராக்கி உபயோகிக்கலாம். இதனுடன் கரிவேப்பிலையையும் சேர்த்து கொள்ளலாம். இதனை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். இதனால் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து அனைத்து இடங்களும் நன்றாக முடி வளர உதவும்.
ஹேர் மாஸ்க்:
நெல்லிக்காய் மற்றும் வெந்தயப் பொடி, மற்றும் கறிவேப்பிலையை தண்ணீர் அல்லது தயிருடன் கலக்கவும். அடர்த்தியாகவும் பளபளப்புக்காக முடி வளர, ஆழமான இது ஒரு இயற்கை கண்டீஷனராக உபயோகிக்கலாம்.
மேலும் படிக்க | Facial Hair: முகத்தில் முடி வளருதா? ‘இந்த’ வைத்தியம் செய்தால் சரியாகும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ