உடல் எடையை குறைக்க தேநீர் எப்படி உதவும்: காலையில் எழுந்தவுடனேயே ஒரு கப் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு, இது இல்லாவிட்டால், அந்த நாள் முழுவதும் முழுமையடையாது, தலைவலி பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். பலருக்கு, தூக்கம் மற்றும் சோர்வைப் போக்க இதை விட சிறந்தது எதுவுமில்லை, ஆனால் பால் மற்றும் சர்க்கரை டீ உடல் பருமனை அதிகரிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதே போல் அவை செரிமானத்திற்கும் நல்லதல்ல. எனவே டீ குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேநீர் அருந்தும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்


1. தேநீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் இதை குடிப்பவர்களின் எடை அதிகரிக்கிறது. நீங்கள் தேநீரின் மூலம் நிறைய சர்க்கரையை உட்கொள்கிறீர்கள், அதன் காரணமாக அது கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரிக்கிறது, எனவே நீங்கள் சர்க்கரை இல்லாமல் தேநீர் அருந்தலாம் அல்லது குறைந்தபட்ச சர்க்கரையைச் சேர்க்கலாம், இதன் காரணமாக உடலில் நிறைய வேறுபாடுகள் இருக்கும்.


மேலும் படிக்க | ஹோமியோபதி மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?


2. பொதுவாக ஒரு கப் டீயில் சுமார் 125 கலோரிகள் இருக்கும், இதற்குக் காரணம் சிலர் முழு கொழுப்புள்ள பாலை டீ தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். நீங்கள் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை அதிகரிக்க விரும்பவில்லை என்றால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலை (Skimmed milk) பயன்படுத்துங்கள், ஏனெனில் அதில் மிகக் குறைந்த கொழுப்பு இருக்கக்கூடும்.


3. காலை அல்லது மாலையில், டீ குடிக்கும் போதெல்லாம், நாம் அதனுடன் உப்பு தின்பண்டங்களையும் சாப்பிடுகிறோம், பொதுவாக இந்த கலவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுவதில்லை, ஏனெனில் எண்ணெய் மற்றும் உப்பு உணவுகள் எடையை அதிகரிக்கச் செய்யும்.


4. நாள் முழுவதும் தேநீர் குடித்துக் கொண்டே இருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும், இந்த பானத்தை 24 மணி நேரத்தில் 2 முறை மட்டுமே உட்கொள்வது நல்லது.


5. கிரீன் டீ ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. பால் மற்றும் சர்க்கரையுடன் டீக்கு பதிலாக கிரீன் டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், கொழுப்பு எரியும் எளிதாகிவிடும்.


6. உங்களுக்கு காலையில் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் காலை உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது உணவிற்கு பின் ஒரு மணி நேரம் கழித்தோ டீ குடிக்கலாம்.


பால் தேநீருக்கு பதில் இந்த டீ உட்கொள்ளலாம்


* எடை குறைப்பு என்று வந்ததுமே முதலில் நம் நினைவுக்கு வருவது க்ரீன் டீ தான். க்ரீன் டீயில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவும் ஃபிளவனாய்டுகள் உள்ளது. எனவே உடல் எடை குறைப்பில் க்ரீன் டீ சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.


* குறைந்த பதப்படுத்தப்பட்ட தேயிலை வகைகளில் ஒன்றுதான் ஒயிட் தேயிலை. இந்த உயிர் தேயிலையை வைத்து தயாரிக்கப்படும் ஒயிட் தேநீர் கொழுப்புகளை கரைக்கவும், புதிய கொழுப்பு செல்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.


* காமெலியா சினென்சிஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் இலையை கொண்டு தயாரிக்கப்படும் ஊலாங் தேநீர் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது.


* பிரபலமாக பலரும் பருகும் பிளாக் டீ உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது.


* உடல் எடை குறைப்பில் செம்பருத்தி தேநீரும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தேநீர் குடிப்பதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை உடனே குறைக்கணுமா? இந்த தவறுகளை செய்யதீர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ