Weight Loss Tips: உடல் எடையை குறைத்து அழகாக இருக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் தற்போதைய பிஸியான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றால் நமது உடல் எடை தவறான முறையில் அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க நம்மால் சரியான நேரத்தை ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. பலர் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். ஆனால், உணவுக் கட்டுப்பாடு என்பது எளிதான காரியம் அல்ல. அதேபோல் தினம்தோறும் ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்யவும் நமக்கும் நேரம் கிடைப்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்கும் மசாலா


இப்படிப்பட்ட நிலையில், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது நமக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது. அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். பாலுடன் ஒரு மசாலா பொருளை கலந்து சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவி கிடைக்கும். அது எந்த மசாலா? அதை எப்படி உட்கொள்வது? இந்த விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம். 


பாலுடன் இலவங்கப்பட்டை


பலவீனமான குழந்தைகள் பெரும்பாலும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், பால் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால் எடையை அதிகரிக்கும் பால், இலவங்கப்பட்டையுடன் சேர்ந்தால், எடை இழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக மாறும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு (Belly Fat) கரைந்து உடல் எடை சீராக குறையத் தொடங்கும். 


மேலும் படிக்க | சுகர் அதிகமாயிடுச்சா... இந்த பச்சை சட்னியை ட்ரை பண்ணுங்க - கட்டுக்குள் வரும்!


இதை எப்படி உட்கொள்வது?


இதற்கு 1 கிளாஸ் பால் மற்றும் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் எடுத்துக்கொள்ளவும். இலவங்கப்பட்டை தூளை பாலுடன் கலந்து சூடாக்கவும். இது நன்கு கொதித்ததும் ஆறவைத்து உட்கொள்ளவும். இது உங்கள் எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். 


இலவங்கப்பட்டை மற்றும் பால்: இந்த கலவையால் கிடைக்கும் பிற நன்மைகள்


- இது மன அழுத்தத்தை குறைக்கிறது.
- பாலில் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பதால் தூக்கம் மேம்படுகிறது.
- இலவங்கப்பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. 
- உடலில் உள்ள அழற்சியை அகற்றவும் இது உதவுகின்றது.
- உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.
- பாலுடன் இலவங்கப்பட்டை பொடி கலந்து குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகின்றது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | வேகமா எடை குறைக்க தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டா போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ