கல்லீரலை பத்திரமாய் பாதுகாக்கும் பானம்: நச்சுகள் நிமிடத்தில் காலியாகும்
Liver Detox: கல்லீரல் பெரிய அளவில் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் இருந்து கழிவுகளை அகற்ற சிறுநீரகங்களுக்கு உதவுகிறது.
Liver Detox: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட வேண்டியது மிக அவசியமாகும். நமது உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரலும் ஒரு மிக முக்கியமான உறுப்பு. இதில் ஏற்படும் செயலிழப்பு அதன் செயல்திறனை பாதிக்கிறது. இது உடலின் செயல்பாட்டில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் பெரிய அளவில் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் இருந்து கழிவுகளை அகற்ற சிறுநீரகங்களுக்கு உதவுகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணம் மோசமான வாழ்க்கை முறையாகும். இதில் குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவை அடங்கும். சில சமயங்களில் சிலருக்கு தங்கள் உணவுமுறையை மாற்றுவது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் கல்லீரலில் உள்ள நச்சுகள் அவ்வப்போது அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். அதனுடன் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
பல இயற்கையான, எளிய வழிகளில் கல்லீரலில் உள்ள நச்சுகளை நீக்கமுடியும். அதை பற்றி இங்கே காணலாம்.
எத்தனை வகையான கல்லீரல் நோய்கள் உள்ளன?
கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை. ஆரோக்கியமான உணவை உட்கொள்ளாவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். மிகவும் பொதுவான கல்லீரல் பிரச்சனை கொழுப்பு கல்லீரல் ஆகும். இதில் மதுபான கல்லீரல் நோய், மதுபானம் அல்லாத கல்லீரல் நோய் ஆகியவை அடங்கும். கூடுதலாக, கல்லீரல் ஈரல் அழற்சி, ஹெபடைடிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஆகியவையும் உள்ளன.
மேலும் படிக்க |
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சூப்பர் உணவு
பொதுவாக அனைத்து விதமான கல்லீரல் நோய்களையும் குணப்படுத்த, உங்கள் உணவில் ஒன்றை மட்டும் சேர்த்துக்கொண்டால் போதும் என உணவியல் நபர்கள் கூறுகிறார்கள். அது ஆப்பிள் சைடர் வினிகர். ஆப்பிள் வினிகர் கல்லீரலில் சேரும் அழுக்கு மற்றும் கொழுப்பை அகற்ற உதவுகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதால் தொற்று பிரச்சனை நீங்கும். மேலும் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வதால் ஜீரண சக்தி பலப்படும்.
ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி பயன்படுத்த வேண்டும்?
கல்லீரலில் உள்ள நச்சை நீக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் வினிகர் சேர்த்து, இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மலச்சிக்கலை அதிகரிக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ