குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தாலே பலருக்கு சிரமம் தான். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னே வெயில் 100 டிகிரியை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. கோடைக்காலத்தை எப்படி சமாளிப்பது இங்கு காண்போம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோடைக்கால குளு குளு டிப்ஸ் இதோ!!!


* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கோடையில் வயிறு பிரிட்ஜ் போல குளு குளுவென்றிருக்கும். 


* மோரில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தினமும் காலை - மாலை குடித்து வாருங்கள். நீர்க்கடுப்பு ஏற்படாது.


* முதல் நாளே சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து அருந்தினால் வெயில் கொடுமையிலிருந்து விடுபடலாம்.


* ஊறுகாய், எண்ணெய், காரம், புளி, மாங்காய் இவற்றை அளவோடு சாப்பிட்டால் உஷ்ணத்திலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.


* முள்ளங்கி, வாழைத்தண்டு, வெங்காயம், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள உஷ்ணம் தணியும்.


* கற்பூரவல்லி வாழைப்பழத்தை பால் விட்டு ஜூஸ் போல செய்து சாப்பிட்டால் வயிறு குளிரும்.


இவ்வாறாக செயற்கையான குளிர்பானங்களையும், நிறமூட்டப்பட்ட உணவு பொருட்களையும் தவிர்த்து இயற்கையான உணவு வகைகளையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றினால், இந்த கோடைக்காலம் நமக்கு குளிர்ச்சி தரும் காலம் தான்.