பொடுகு பிரச்சனை: குளிர் காலத்தில் நம் சருமத்தில் இருந்து உடல் வரை அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது, ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் நாம் நம் தலைமுடியையும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் நாம் பொடுகு மற்றும் வறட்சிக்கு இரையாகி விடலாம். பொதுவாக நம் முடியின் வெளிப்புற மற்றும் உட்புற ஊட்டச்சத்தில் நாம் கவனம் செலுத்தாதபோது தான் முடி தொடர்பான பிரச்சனகள் ஏற்படத் தொடங்குகிறது. பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு, எண்ணெய் மசாஜ் இல்லாதது, மாசு, தூசி, புகை மற்றும் வானிலையில் ஈரப்பதம் ஆகியவை முடியை சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, நம்முடைய பாட்டி வைத்தியம் தான் மிகச் சரியான முறை. அதுபற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொடுகு மற்றும் வறட்சிக்கு இவற்றைப் பயன்படுத்துங்கள்


1. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. மேலும் சருமத்தில் செதில் செதிலாக உதிர்வது மற்றும் பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது. தேங்காய் எண்ணையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு அலசவும்.


மேலும் படிக்க | ரஸ்க் சாப்பிட்டு ரிஸ்க் எடுக்காதீங்க! ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி தெரியுமா?


2. டீ ட்ரீ ஆயில்
முடியில் உள்ள பொடுகுத் தொல்லையை நீக்க உதவும் டீ ட்ரீ ஆயிலில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஸ்பெஷல் எண்ணெயை தலையில் தொடர்ந்து தடவி வந்தால், முடியின் வறட்சி அடியோடு போய்விடும்.


3. கற்றாழை
கற்றாழை சரும கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பயோ ஆக்டிவ் சேர்மங்களின் வளமான ஆதாரமாகும். கற்றாழையில் இருக்கும் ஆன்ட்டி ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் பொடுகு உள்ளிட்டஎல்லாவிதமான பூஞ்சை தொற்றுகளையும் எதிர்த்து போராட உதவுகிறது. 


4. பூண்டு
பூண்டில் உள்ள முதன்மையான பயோ ஆக்டிவ் மூலக்கூறுகள் ஜோயின் மற்றும் அல்லிசின் ஆகும். பொடுகு ஏற்பட காரணமான பூஞ்சை தொற்றுக்களை இது தடுக்கிறது.


5. ​வெங்காயச் சாறு
வெங்காயச்சாறு பைட்டோ கெமிக்கல் மூலக்கூறுகள் நிறைந்தது என்றும் இது பொடுகை தடுக்க பெருமளவில் உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை மேற்பூச்சாக தடவும்போது சருமத்தில் செதில்கள் உதிர்வதை தடுத்து பொடுகை குறைக்க உதவுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பூண்டு சாப்பிட்டால் கொலஸ்டராலின் அளவு குறையுமா? உண்மை என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ