Weight Loss Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலத்தில் எடை இழப்பு (Weight Loss in Winters)


குளிர்காலத்தில் நமது எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஏனென்றால் இந்த காலத்தில் உடல் செயல்பாடுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஒரு விதமான சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொள்ளும். குளிர் அதிகமாக இருப்பதால் இந்த கலாத்தில் வழக்கமாக வெளியே நடைபெயிற்சி செய்பவர்கள் கூட இந்த காலத்தில் அதை செய்ய மாட்டார்கள். இந்த காரணங்களினால், குளிர் காலத்தில் எடை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.  


சிலருக்கு வீட்டு வேலைகளாலும், அலுவலகம் செல்வதாலும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. அப்படிபப்ட்டவர்களுக்கு உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையைக் குறைக்கும் (Weight Loss) சில எளிய டிப்ஸ்களை இங்கே காணலாம். 


உங்கள் உணவில் புரதத்தை சமநிலைப்படுத்துங்கள்


உணவில் சரியான அளவு புரதத்தை (Proteins) உட்கொள்வது அவ்வப்போது பசியின் உணர்வைக் குறைக்கிறது. இதன் காரணமாக நாம் குறைந்த கலோரிகளை உட்கொள்வதுடன் எடை அதிகரிப்பதும் இதனால் குறைகிறது. நமக்கு நிரம்பிய உணர்வும் கிடைக்கிறது. இதன் காரணமாக நாம் ஆரோகியமற்ற, தேவையற்ற கூடுதல் உணவை உட்கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதனால் நமது உடலில் கொழுப்பும் அதிகரிக்காமல் இருக்கும்.


ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்


உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக (Healthy Food) இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க உணவு உட்கொள்ளலை குறைக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மாறாக ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலே போதும். இதனால் தொப்பையில் கொழுப்பு (Belly Fat) சேராமல் தவிர்க்கப்படுவதோடு உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும். 


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை இயல்பாய் கட்டுப்படுத்தும் சூப்பர் பானங்கள்! செலவில்லாமல் தீர்வு தரும் டிரிங்க்ஸ்


அதிக பழங்களை சாப்பிடுங்கள்


உங்கள் நாளை ஊட்டச்சத்துக்களுடன் தொடங்குங்கள், அதாவது தினமும் பழங்களை (Fruits) சாப்பிடுங்கள். இவை உங்கள் உடலில் உள்ள நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும். காலையில் லேசான காலை உணவை சாப்பிட விரும்பினால், நீங்கள் பல வகையான பழங்களை சாட் செய்து காலை உணவாக சாப்பிடலாம்.


மெதுவாக மென்று சாப்பிடுங்கள்


உணவு உண்ணும் போதெல்லாம் அவசரப்பட்டு சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றில் உணவை ஜீரணிக்க எளிதாக்கும். பெரும்பாலும், விரைவாக சாப்பிடும் போது, ​​நாம் அதிக உணவை உட்கொண்டு, பின்னர் நமது எடையைப் பற்றி கவலைப்படுகிறோம். எனவே, உணவை மெதுவாக மென்று சாப்பிடுங்கள். இதன் மூலம் அதிக உணவு உண்பதும் தவிர்க்கப்படும்.  


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Obsessive Compulsive Disorder என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ