பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி: பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும். எனவே பப்பாளியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது உங்கள் சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்க உதவுகிறது, இதனால் முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனையிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இது தவிர, வயதான எதிர்ப்பு பண்புகளும் பப்பாளியில் உள்ளன, இது உங்கள் சருமத்தில் வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அப்படிப்பட்ட நிலையில், இன்று பப்பாளி ஃபேஸ் பேக் செய்யும் முறையை உங்களுக்காகக் கொண்டு வந்துள்ளோம். இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும், எனவே பப்பாளி ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பப்பாளி ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்-


  • 2 டீஸ்பூன் பப்பாளி கூழ்

  • 2 டீஸ்பூன் வெள்ளரி சாறு

  • அரை தேக்கரண்டி தேன்


மேலும் படிக்க | கல்லீரல் கொழுப்பை எரிக்கும் ‘சில’ புரோட்டீன் உணவுகள்!


பப்பாளி ஃபேஸ் பேக் செய்வது எப்படி? (How to make papaya face pack)


  • பப்பாளி ஃபேஸ் பேக் செய்ய, முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

  • பின்னர் அதனுடன் பப்பாளி கூழ், வெள்ளரி சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.

  • அதன் பிறகு, இவை அனைத்தையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும்.


இப்போது உங்கள் பப்பாளி ஃபேஸ் பேக் தயார்.


  • பப்பாளி ஃபேஸ் பேக்கை எப்படி பயன்படுத்துவது?(How to apply papaya face pack)

  • பப்பாளி ஃபேஸ் பேக் போடும் முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.

  • பின்னர் தயாரிக்கப்பட்ட பேக்கை உங்கள் கைகளால் முகம் மற்றும் கழுது முழுவதும் தடவவும்.

  • அதன் பிறகு, இந்த பேக்கை முகத்தில் சுமார் 10-15 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும்.

  • பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.

  • சிறந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு 3 முதல் 4 முறையாவது இந்த பேக்கைப் பயன்படுத்தவும். 


பப்பளியை முகத்தில் இப்படியும் பயன்படுத்தலாம்


பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும்.


 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ