பப்பாளி கேசரி செய்யும் முறை!!

தேவையானவை:
ரவை - ஒரு கப்
பப்பாளித் துண்டுகள் - ஒரு கப்
காய்ச்சிய பால் - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு, திராட்சை, நெய் - தேவையான அளவு
செய்முறை:
பப்பாளி துண்டுகளை பால் சேர்த்து அரைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் ரவையை வறுத்து தனியாக வைக்கவும். அதன்பின் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். பின்னர் வாணலியில் தண்ணீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு கொள்ளவும். அது கரைந்ததும் பப்பாளி விழுது சேர்த்துக் கிளறி ரவையைச் சேர்த்து வேகவிட்டு ஏலக்காய்த்தூள் சேர்க்கவும் பின்னர் கொஞ்சம் நெய் ஊற்றி மேலும் கிளறி இறக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சையை அதனுடன் சேர்க்கவும்.