Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பலரை வாட்டி வதைக்கும் பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இதனால் பல வித உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்ககும் மோசமான வாழ்க்கை முறையும் உடல் எடை அதிகரிப்பிற்கு பெரும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடுவது, எப்போது வேண்டுமானாலும் தூங்குவது, என எந்த ஒரு முறையும் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதால், பல முறை பலருக்கு எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. மோசமான வாழ்க்கை முறை ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பலர் பல நோய்களுக்கும் ஆளாகிறீர்கள். அதுமட்டுமின்றி உடலில் உப்பசமும் ஏற்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாவது இந்த காலத்தில் குழந்தைகளிடம் காணப்படும் பிரச்சனை என்பது கசப்பான உண்மையாகவே உள்ளது. முன்னர் நடுவயதை தாண்டும் போதே இந்த பிரச்சனை வரத் தொடங்கியது. ஆனால், இப்போது இதற்கு வயது வரம்பே கிடையாது. தொப்பையை குறைத்து, உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சிலர் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் இவற்றாலும் பெரும்பாலும் எந்த பலனும் இருப்பதில்லை. எனினும் சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் எடையை குறைக்க உதவும் அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.


எடை இழப்பு (Weight Loss) மற்றும் கலோரி மேலாண்மைக்கு பழங்காலத்திலிருந்தே பல மசாலாக்கள் மற்றும் மூலிகைகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை சரியான வழியில் பயன்படுத்தினால் உடல் எடையை திறம்பட குறைகக் முடியும் என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படிப்படட் மேஜிக் மசாலாக்கள் பற்றி இங்கே காணலாம். 


இலவங்கப்பட்டை: 


இலவங்கப்பட்டையில் (Cinnamon) உள்ள இயற்கையான சேர்மங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கூடுதல் கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க இது உதவும். 


மஞ்சள்: 


மஞ்சளில் (Turmeric) குர்குமின் எனப்படும் சக்திவாய்ந்த கலவை உள்ளது. இது நீண்ட காலமாக அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது இரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குர்குமின் உப்பசத்தைக் கட்டுப்படுத்த உதவுவதால் இதை உட்கொள்வதன் மூலம் உடல் பருமனைத் தடுக்கலாம். இது எடை அதிகரிப்புக்கு முக்கிய வகைகளில் நன்மை புரியும். 


மேலும் படிக்க | காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!


இஞ்சி: 


இஞ்சி (Ginger) பழங்காலத்தில் இருந்து செரிமான ஆரோக்கியத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தீர்வாக இருந்து வருகிறது. இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை இழப்புக்கும் உதவுகிறது. இது ஒரு நச்சு நீக்கியாகவும், மருத்துவ குணங்களை கொண்டதாகவும் கருதப்படுகிறது. 


கருப்பு மிளகு: 


கருப்பு மிளகு (Black Pepper) நாம் உண்ணும் உணவின் சுவையை அதிகரிக்கவும். கூடுதலாக இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. கருப்பு மிளகில் உள்ள பைபரின் என்ற கலவை கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது தொப்பை கொழுப்பு இழப்புக்கும் காரணமாக உள்ளது. 


கடுகு:


கடுகு (Mustard Seeds) ஒரு சக்திவாய்ந்த மற்றும் வினோதமான, நாக்குக்கு ருசி கொடுக்கும் சுவை கொண்டது. கடுகு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான ‘சில’ முக்கிய காரணங்கள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ