Weight Loss Tips: நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், உணவின் அளவை குறைத்தால், உடல் எடை வேகமாக குறையும் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை குறைப்பதால் உடல் எடை குறையாது, மாறாக நமது உடலின் ஆற்றலில்தான் பாதிப்பு ஏற்படும். இதற்கு பதிலாக நாம் தினசரி உட்கொள்ளும் சில காய்கள் மற்றும் பழங்கள் மூலமாகவே உடல் எடையை குறைக்கலாம். அப்படி உடல் எடையை குறைக்க மிகவும் உதவும் ஒரு பழத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை இழப்புக்கு பப்பாளி (Papaya for Weight Loss): 


பப்பாளியில் காணப்படும் பல ஊட்டச்சத்துகள், உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கொழுப்பு மற்றும் எடை குறைகிறது. எடை இழப்புக்கு (Weight Loss) இது சிறந்த பழமாக கருதப்படுகிறது.


பப்பாளி (Papaya) மிகவும் குறைந்த கலோரி கொண்ட பழம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும், வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக பயனற்ற, ஆரோக்கியமற்ற பொருட்களை ஆங்காங்கே சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. கலோரிகள் குறைவாக இருப்பதுடன், பல வைட்டமின்களும் பப்பாளியில் இருக்கின்றன. பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் (Health Benefits of Papaya)


காலை உணவில் பப்பாளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்


தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் உடல் பருமனை குறைக்க, தினமும் காலை உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஏராளமான ஆற்றலை வழங்குவதோடு, படிப்படியாக அதிகப்படியான கொழுப்பையும் குறைக்கும். பப்பாளியை துண்டுகளாக நறுக்கி காலை உணவாக சாப்பிடுங்கள்.


பப்பாளி சாறு குடிக்கவும்


உடல் எடையை குறைக்க, பப்பாளி சாற்றை (Papaya Juice) உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளி ஜூஸ் குடிப்பதால் உடலில் சேரும் கொழுப்பு குறையும். பப்பாளியில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பைக் குறைத்து உடற்தகுதியை மேம்படுத்த உதவுகிறது.


மேலும் படிக்க | Ayurved: உடல் ஃபிட்டா இருக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் அஞ்சறைப் பெட்டி பொருட்கள்!


பால் மற்றும் பப்பாளி


நீங்கள் காலை உணவுக்கு கனமான உணவை சாப்பிட விரும்பினால், பால் மற்றும் பப்பாளி நன்மை பயக்கும். இதற்கு பால் மற்றும் பப்பாளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மேலும் அதில் சில உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்க்கவும்.


பப்பாளி மற்றும் தயிர்


தயிர் மற்றும் பப்பாளி எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும். இதனால் உடல் பருமனும் குறைகிறது. பப்பாளியை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Weight Loss Tips: பஜ்ஜி போண்டாவிற்கு பதிலா... ‘இவற்றை’ சாப்பிடுங்க...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ