நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவியாய் உதவும் வெந்தய நீர்: இப்படி குடிச்சி பாருங்க
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Diabetes Control Tips: உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. மக்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை பற்றி கவனக்குறைவாக இருந்தால், நீரிழிவு நோயின் பிடியில் சிக்கிக்கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். சில உணவுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களின் ஆரோக்கியம் மோசமடையத் தொடங்குகிறது. பல எளிய இயற்கையான வழிகளில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம். அவற்றில் வெந்தய நீரும் ஒன்று.
சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட வெந்தய நீரை ஆயுதமாகப் பயன்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். பிரபல உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் இதை பற்றி விளக்குகிறார்.
Fenugreek Water: நீரிழிவு நோயாளிகள் ஏன் வெந்தய தண்ணீரை குடிக்க வேண்டும்?
நம் உடல் இரத்த சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதில் வெந்தய விதைகளின் பயன்பாடு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சுமார் 10 கிராம் வெந்தயத்தை வெந்நீரில் ஊறவைத்து குடித்தால், டைப்-2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தில், ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதில் குளுக்கோமன்னன் ஃபைபரும் அடங்கும்.
மேலும் படிக்க | நோயற்ற வாழ்விற்கு.... தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் போதும்...
இதை உட்கொள்வதால், குடலில் சர்க்கரை மற்றும் ஆல்கலாய்டுகளான ஃபெங்ரெசின் மற்றும் ட்ரைகோனெல்லைன் உறிஞ்சப்படுவது தாமதப்படுகிறது. இதனுடன், இரத்தச் சர்க்கரைக் குறைவு நடவடிக்கை மற்றும் 4 ஹைட்ராக்ஸிசோலூசின் (4-OH Ile) அமினோ அமிலம் கணையத்தில் வேலை செய்கிறது. இது இன்சுலின் வெளியிடுவதை எளிதாக்குகிறது. இந்த காரணத்தால்தான், பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெந்தயத் தண்ணீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். இதனால் நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.
Benefits of Fenugreek Water: வெந்தய நீர் குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்
- வெந்தயத் தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு செரிமானம் சிறப்பாக இருக்கும்.
- வெந்தய நீர் மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது.
- உடல் பருமனால் பாதிக்கப்பட்டு எடயை குறைக்க நினைப்பவர்களுக்கு வெந்தய நீர் மிகவும் நன்மை பயக்கும்.
- இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, பசியைக் குறைக்கிறது.
- வெந்தயத் தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடியும்.
- வெந்தயம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.
- காலநிலை மாற்றங்களின் போது ஒருவர் தினமும் வெந்தயத் தண்ணீரைக் குடிக்கலாம்.
- அவ்வாறு செய்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- இது தொற்று அபாயத்தையும் குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ