உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்
Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Weight Loss Tips: உடல் பருமன் உலக மக்களை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உடல் பருமனால் ஒருவருடைய ஆளுமை குறைவதோடு பல வித உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. உடலில் சேரும் கொழுப்பு வயதுக்கு ஏற்ப பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால், உடனடியாக அதை சரி செய்வது அவசியம். பலர் உடல் எடையை குறைக்க ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள். சிலர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் உதவியுடன் தங்கள் எடையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
எனினும், அனைவராலும் தினமும் ஜிம் செல்லவோ அல்லது எடை கட்டுப்பாட்டுக்கான டயட்டை பின்பற்றவோ முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் உடல் எடையை எவ்வாறு குறைப்பது? சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன. தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்க அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்பில் வேர்க்கடலையின் நன்மைகள் (Peanuts for Weight Loss):
உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒரு பணியாக பார்க்கப்படுகின்றது. இதற்கு கடின உழைப்பு மற்றும் சரியான உணவு தேவை ஆகியவை மிக அவசியமாகும். நிலக்கடலை எனப்படும் வேர்க்கடலை கடலை எடை இழப்புக்கான இந்த கடினமான பயணத்தை எளிதாக்குகிறது. இதை உட்கொள்வது புரோட்டீன் ஷேக் உட்கொள்வதற்கு இணையாக பார்க்கப்படுகிறது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
பெரும்பாலான ஜிம்களில் உள்ள பயிற்சியாளர்கள் பீநட் பட்டர் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். புரதத்தைத் தவிர, வேர்க்கடலையில் அதிக அளவு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதனுடன் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் இதில் உள்ளன. அதிக புரதச்சத்து கொண்ட உணவு பசியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்வதும் தடுக்கப்படுகின்றது. எது எடை குறைக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு வேர்க்கடலை எப்படி பயன்படுகிறது?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வேர்க்கடலை மிக பயனுள்ளதாக இருக்கும் என பல சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிக புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு, பசியை கட்டுப்படுத்தி, கூடுதல் கலோரிகளை உட்கொள்வதிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுவதுடன் உடலின் செரிமானத்தையும் சீராக வைக்கிறது. வேக்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. இவை எடையை பராமரிக்க உதவுகின்றன.
எடை இழப்புக்கு வேர்க்கடலையை இந்த வழிகளில் உட்கொள்ளலாம்:
1. பீநட் பட்டர்
பீநட் பட்டர் பலருக்கு பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது ட்ரை ரோஸ்ட் செய்து தயாரிக்கப்படுகிறது. இதில் 90 சதவீதம் வேர்க்கடலை உள்ளது. 10 சதவீதம் சுவைக்கான கூறுகளும் வெண்ணெயும் இதுல் சேர்க்கப்படுகின்றன. இது தாவர எண்ணெய், உப்பு, டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் கார்ன் சிரப் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
2. வேர்க்ககடலை எண்ணெய்
வேர்க்கடலை எண்ணெய் எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது இதில் உள்ள கொழுப்பு அமிலங்களின் அளவு மிகவும் சீராக இருக்கிறது. இதன் காரணமாக இதை உட்கொண்டால் கொழுப்பு அதிகரிக்காது. இதில் உள்ள லினோபனோல் மற்றும் ஒலிக் அமிலம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் திறன் கொண்டது.
மேலும் படிக்க | கால் பாதங்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்! ஆபத்து
3. வறுத்த வேர்க்கடலை
உடல் எடையை குறைக்க (Weight Loss) வறுத்த வேர்க்கடலையை உட்கொள்ளலாம். சுவைக்கான எந்த வித கூறுகளும் சேர்க்காத வேர்க்கடலை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, அவல் உப்புமா, கலந்த சாதங்கள், கறிகள், கூட்டு ஆகியவற்றிலும் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ