பூண்டை பாலுடன் சேர்த்துக் குடித்தால் எவ்வளவு நன்மை தெரியுமா?
பாலுடம் பூண்டு சேர்த்து குடித்து வந்தால் எவ்வளவு நன்மை என்பது பற்றி தெரிந்து கொள்ள இதை படியுங்கள்.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொருள்தான் பூண்டும், பாலும். பூண்டு சேர்த்த பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். இந்த பூண்டு கலந்த பாலை குடிப்பதால் உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
> நமக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், நீங்கள் முதலில் செய்யவேண்டியது பூண்டு சேர்த்த பாலைக் குடிப்பது. இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சல் உடனயாக குறைந்துவிடும்.
> நமது முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாக தடுத்துவிடும் இந்த பூண்டு கலந்த பால்.
> குழந்தை பெற்ற பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதோடு பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும், உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.
> செரிமானம் பிரச்சனை இருந்தால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனென்றால் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.
> அதுமட்டுமல்லாது, பூண்டு கலந்த பாலைக் குடித்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழியும். தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு கலந்த பாலை குடிக்க வேண்டும்.