நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்!
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு இருக்கும் என்று மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சமூக சேவை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து தனக்கென ஒரு பாதையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அப்சரா ரெட்டி நிறுவனம் சமூகத்தில் பின்தங்கிய சூழலில் உள்ள குழந்தைகளுக்கான 'குட் டீட்ஸ் கிளப்' பல்வேறு மனிதாபிமான செயல்களின் மூலம் சமூகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் விதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குட்டீட்ஸ் கிளப் மற்றும் மெட்ராஸ் ஈஎன்டி ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பிரபல மருத்துவர் மோகன் காமேஸ்வரனுடன் இணைந்து, கேட்கும் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகள் 30 பேருக்கு, உயர்தர காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கின்றனர்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... டீயுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்...
தங்கள் தாயின் குரலைக் கூட கேட்டிறாத, அன்றாட சத்தத்தை ஒருபோதும் அனுபவிக்காத குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி எல்லையில்லா ஆனந்தத்தையும், நம்பிக்கையின் கீற்றையும் அக்குழந்தைகளின் மகிழ்ச்சி வெளிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அப்சரா ரெட்டி, "நாம் சாதாரணமாக கேட்பவற்றை அறிந்திராத இந்த குழந்தைகளுக்கு, இந்த கருவிகள் புதிய உலகிற்கான நுழைவாயிலாக இருக்கும். காது கேட்கும் கருவிகளை வழங்கும்போது வெறுமனே ஒலியை பரிசாக வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொடர்புகொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், வரம்புகள் இல்லாமல் கனவு காண்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும் இருக்கும். குட் டீட்ஸ் கிளப் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பார்க்கப்படுவதையும், கேட்கப் படுவதையும், நேசிக்கப்படுவதையும் உறுதி செய்வது எங்களின் நோக்கம்" என தெரிவித்தார்.
பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் பேச்சு
நெருங்கிய உறவில் திருமணம் புரிந்தால், பிறக்கும் குழந்தைகளுக்கு, காது கேளாமை பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு உயர்தர காது கேட்கும் கருவிகளை வழங்கிய பின்னர் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள், பேச்சுப்பயிற்சிகளை மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையம் வழங்கியது. குழந்தைகளுக்கு செவித்திறன் கருவிகளை பொருத்திய டாக்டர் மோகன் காமேஸ்வரன் பேசியதாவது, உலகம் முழுவதும் 1000ல் 1 குழந்தைக்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 1000 குழந்தைகளில் 2 பேருக்கு பிறவி செவித்திறன் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் அந்த எண்ணிக்கை 6 ஆக உள்ளது.
உலக அளவில் உள்ள பிறவி காது கேளாமை பாதிப்பு விகிதத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 6 மடங்கு அதிகமாக உள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் செய்து கொள்வது தான். இன்னும் தமிழகத்தில் இந்த கலாச்சாரம் இருந்து வருகிறது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காது கேட்காமல் இருந்தால் பேச்சுத்திறனை இழக்க நேரிடும். மேலும் அறிவு வளர்ச்சி குறைபாடு ஏற்படும். செவித்திறன் இல்லாத ஒரே காரணத்தால், எதையும் சாதிக்க முடியாமல் பல குழந்தைகள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதை தவிர்க்க விழிப்புணர்வு அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ