தற்போது மழை வரத்து அதிகரித்து கொண்டிருப்பதால் நம்மில் பலர் இந்த சளி தொல்லையால் அவதியுற்றுக் கொண்டிருப்போம். நம்முடைய முன்னோர்கள் சளி, இருமல் வந்துவிட்டால் துளசி இலையை மென்று அதன் சாரை விழுங்கினாலே சளி நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும் என்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கு அது கிடைப்பது என்பது மிக கடினமான காரியம்தான். இதற்கு, இயற்கையான முறையில் நம்மிடமே தீர்வுகள் உள்ளது. இது தவிர சுலபமான சில வழிமுறைகளை நீங்கள் கையாண்டால் இந்த சளிக்கு தீர்வு காணலாம்.


சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.


உங்கள் நெஞ்சு சளியை உடனே தீர தினமும் 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும்.


குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். கீழேக் கொடுக்கப்பட்டுள்ள கசாயத்தை தினமும் அவர்களுக்கு கொடுத்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். 


1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சீரகத்தை நன்கு பொடி செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டால் மார்புச் சளி நீங்கும். தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தட வேண்டும். இது நெஞ்சு சளியைப் போக்கும்.


 பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும். சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும். .


 தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தான் தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும் சளியையும் குறைக்கும்.


முக்கியமாக எந்தக்காரணம் கொண்டும்  எதிலும் சர்க்கரை சேர்க்க வேண்டாம் . இருமல் அதிகரிக்க காரணமே இந்த இனிப்புகள் தான்.