அசாம் தேயிலைத் தோட்டத்தில் ஒரு குழந்தை இறந்தது தொடர்பாக மர்மம் நிலவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் (Assam) தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் இருந்த மருத்துவ கம்பவுண்டர் ஒருவர்  குழந்தை இறந்ததாக அறிவித்து விட்டார். அந்த  ஒரு வயதுக்கு குறைவான குழந்தையை, அடக்கம் செய்யும் போது, அது கண்விழித்தது. அந்த குழந்தையின் குடும்பத்தினர், அதிர்ச்சியும் சந்தோஷமும் அடைந்தனர்.


ஆனால், அந்த சந்தோஷம்  நீட்டிக்கவில்லை. சில மணிநேரங்களுக்குப் பிறகு , உடல் நிலை மோசமாகிய அந்த குழந்தை இறந்து விட்டது. அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மற்றும் திப்ருகரில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள், அந்த குழந்தை இறந்து விட்டதாக பின்னர் அறிவித்தனர்.


திப்ருகர் மாவட்டத்தில் உள்ள முத்தக் தேயிலை தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காம்பவுண்டர் கவுதம் மித்ரா கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


குடும்பத்தினர் குழந்தையை இறந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதனை வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும், ஆனால் அதனை அடக்கம் செய்யும் போது, குழந்தை கண் விழித்தது. அப்போது, குழந்தை அவர் உயிருடன் இருப்பது அறிந்த அந்த தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததாகவும் குடுமப்த்தினர் கூறியதாக,  உள்ளூர் காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்


தேயிலைத் தோட்ட மருத்துவமனை மருத்துவர் இல்லாத நிலையில், குழந்தை இறந்ததாக அறிவித்தவர் கவுதம் மித்ரா என்னும் கம்பவுண்டர் ஆவார்.


ALSO READ | Pfizer தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வெற்றி...!!!


"ஒருவரை இறந்துவிட்டதாக அறிவிக்க காம்பவுண்டர்களுக்கு அதிகாரம் இல்லை. இது ஒரு மருத்துவரின் வேலை. எனவே, குடும்பத்தினர் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பின்னர் நாங்கள் கம்பவுண்டரை கைது செய்தோம், ”என்று காவல் துறை அதிகாரி கூறினார். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.


திங்கள்கிழமை காலை, ஆத்திரமடைந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குழு, இந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது. காவல்துறையினர் கம்பவுண்டரைக் கைது செய்த பின்னர் இயல்புநிலை திரும்பியது. குழந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், குழந்தை பிழைத்திருக்கும் என என்று குழந்தையின் குடும்பத்தினரும் தொழிலாளர்களும் நம்புகின்றனர்.


ALSO READ | கொரோனாவை தடுப்பதில் BCG தடுப்பூசி பயனளிக்கும் என்கிறது புதிய ஆய்வு..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR