உடல் பருமன் குறைய... கொழுப்பை எரிக்கும் ‘சில’ உணவுகள்!
அறிவியலால் நிரூபிக்கப்பட்ட கொழுப்பை எரிக்கும் சிறந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது கொழுப்பை எதித்து, உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
குறிப்பிட்ட சில உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும், உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். இந்த உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. அவை உடல் உகந்ததாக செயல்பட்டு, உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. நமது உணவில் ஆரோக்கியமான உணவுகளை சிறப்பாகச் சேர்த்துக்கொள்ள உதவும் வகையில், ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா, கொழுப்பு இழப்பை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நம்மில் பெரும்பாலோர் எப்போதும் உடல் எடையை குறைப்பதற்கான வழிகளைத் தேடுகிறோம், அதே நேரத்தில் எடை இழப்பு என்பது உடனே ஏற்படும் மாயம் அல்ல. நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்கும்போது மட்டுமே உடல் எடை குறைவது நிகழும், இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்பட வேண்டும். எனவே, கொழுப்பு மற்றும் கலோரிகளை சுறுசுறுப்பாக எரிக்கும் உணவுகளில் எந்தெந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்."
கொழுப்பை எரிக்க உதவும் 6 உணவுகள்:
1. பாசி பருப்பு
புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாசிப் பருப்பை சாப்பிடுவதால், கோலிசிஸ்டோகினின் எனப்படும் மனநிறைவு ஹார்மோன் அதிகரித்து, வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது,. இதனால் நீங்கள் நீண்ட பசியை உணராமல் இருக்க உதவுகிறது. பருப்பில் உள்ள புரதத்தின் தெர்மிக் விளைவு, தொப்பையை கரைக்கும் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பாசி பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை குறைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும்.
2. மோர்
மோர் குறைந்த கலோரி பானமாக இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இது பசி ஆறிய மனநிறைவை மேம்படுத்தவும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது. மோர் கூடுதலாக உடலுக்கு புரோபையாட்டிக்ஸை தருகிறது. உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளை அது கொடுக்கிறது. இந்த நுண்ணுயிரிகள் விரைவாக ஜீரணிக்கும் தன்மையை கொடுக்கிறது. இதனால் மெட்டாபாலிஸம் அதிகரிக்கிறது.
3. சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது உடல் எடை குறைக்க பெரிதும் உதவும். சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது. நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதனால், குடல் நலனும் மேம்படும்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை 15 நாட்களில் கரைக்கும் ‘கடுக்காய்’! பயன்படுத்தும் சரியான முறை!
4. ராகி
ராகி மெத்தியோனைனின் வளமான மூலமாகும். மேலும், அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் அத்தியாவசிய அமினோ அமிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற சிறு தானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கு அதிக அளவில் கால்சியம் உள்ளது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் அதிக அளவில் உள்ளன. எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்
5. தண்டுக்கீரை விதை (Amaranth)
அமராந்தில் அதிக புரதம் மற்றும் சூடு உள்ளது. இவை இரண்டும் பசியைக் குறைக்கவும் எடை இழப்பை அதிகரிக்கவும் உதவும். எளிதாக கிடைக்கும் அமரந்த் விதைகள் இந்திய சூப்பர்புட் எனலாம். இதில் அதிக அளவு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, அமரந்த் என்பது பசையம் இல்லாத தானியமாகும்.
6. காலிஃபிளவர்
மற்ற காய்கறிகளைப் போலவே காலிஃபிளவரிலும் நார்ச்சத்து அதிகம் மற்றும் போதுமான அளவு புரதம் உள்ளது. புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் ஆகியவற்றின் கலவையானது உடல் கொழுப்பை எரிக்கும் திறன் கொண்டது. நீங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் நிச்சயம் காலிஃபிளவரை சேர்க்க வேண்டும்.
மேலும், நட்ஸ், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உதவும். இருப்பினும், உங்கள் எடை இழப்பு முயற்சிகளை வெற்றி பெற நீங்கள் ஒவ்வொரு நாளும் சரியான எண்ணிக்கையிலான கலோரிகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகளை செய்து, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதை உறுதி செய்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு: ஆலோசனைகள் உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவலை மட்டுமே வழங்குகிறது. இது எந்த வகையிலும் தகுதியான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணர் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரை அணுகவும். இந்தத் தகவலுக்கு ZEE News பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ