கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் இந்த சமயத்தில், தற்போது கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 3,29,942 வழக்குகள் மற்றும் 3,876 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம்    தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இந்தியா 4 லட்சத்துக்கும் குறைவான தொற்றுநோய்கள் பதிவாகி இருப்பது நல்ல விஷயம். ளுடன் கடுமையான சரிவை பதிவு செய்துள்ளது. நேற்று திங்கட்கிழமையன்று, 3,66,161 புதிய COVID-19 வழக்குகள் மற்றும் 3,754 இறப்புகள் பதிவாகின. 


தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது 2,29,92,517 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 2,49,992 ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,56,082 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்த மீட்பு எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்தது.  


இந்தியாவில் மாநில அளவில் COVID-19 எண்ணிக்கை:



இதற்கிடையில், 18 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசி அளவுகள் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் இருக்கின்றன.


அடுத்த 3 நாட்களில் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு குறைந்தது 7 லட்சம் டோஸ் மருந்துகள் கொடுக்கபப்டும் பெறப்படும் என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.


Also Read | தொற்றுநோய் காலத்தில் பெற்றோர் உதவி செய்யவில்லை, என்று குற்றம் சுமத்தும் ஸ்ருதி ஹாசன்


நாட்டில் இதுவரை COVID-19க்கு மொத்தம் 30,56,00,187 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில், 18,50,110 மாதிரிகள் நேற்று சோதனை செய்யப்பட்டன. இந்திய அளவில் COVID-19 மீட்பு விகிதம் 82.75 சதவீதமாக பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டின் திருப்பதியின் எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குறைந்தது 11 கோவிட் -29 நோயாளிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் ஐந்து பேரின் நிலைமை ஆபத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


தற்போது, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் சரிந்துள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு, கொல்கத்தா, டேராடூன் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை புதிய ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.


கோவிட் -19 தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருப்பதாக டெல்லி மாநில அரசு திங்களன்று அறிவித்தது. தற்போதைய இருப்பு 3-4 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விரைவில்  மேலும் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.


Also Read | ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR