Sputnik-V தடுப்பூசி: மே மாதத்திலிருந்து பயன்பாட்டிற்கு வருகிறதா; உண்மை நிலை என்ன
கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது.
கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது.
ஏற்கனவே கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் கொரோனா வைரஸ் (Corona VIrus) தடுப்பூசியான ஸ்பூட்னிக் -V (Sputnik-V ) தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி வழங்கியது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் (Dr Reddy's) நிறுவனம், 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
இந்நிலையில், முதல் கட்டமாக 1கோடியே 25 லட்சம் தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய மக்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிஸ்-வி அடுத்த மாதத்திலிருந்து பயன்பாட்டுக்கு வரும். மே மாதத் தொடக்கத்திலிருந்தே மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார்.
ஆகஸ்ட் 11 அன்று ரஷ்யா (Russia), கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 3,86,452 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பாடுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR