Insomnia: தூக்கமின்மை பிரச்சனையா; சில எளிய வீட்டு வைத்தியங்கள்
நல்ல தூக்கம் வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசை. ஆனால், பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
நல்ல தூக்கம் வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசை. சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இரவில் பல நேரங்களில் தூக்கம் கலைந்து விட்டால், பிறகு மீண்டும் தூங்குவது கடினமாக இருக்கும். இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் வாடுபடுபவர்களுக்கு, உற்சாகமாக வேலை செய்வதிலும் பிரச்சனை இருக்கும். ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால், உங்கள் வேலை திறன் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.
தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபட, கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்:
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால்
நல்ல தூக்கத்திற்கு சிறந்த பானமாகும். பாலில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது, இது செரோடோனினாக மாறும். செரோடோனின் மூளைக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும். இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கிறது. ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் சில பாதாம் பருப்புகள் பாலின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை பெறவும் உதவும்.
மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க
தூக்கமின்மையை விரட்டும் பாதாம்
பாதாமில் ட்ரிப்டோபன் உள்ளது, இது மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மூளையின் சக்தியை அதிகரிப்பதுடன், பாதாம் உங்களுக்கு நல்ல, ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். அதே நேரத்தில், இதில் உள்ள மெக்னீசியம் உங்கள் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் எடுத்துக் கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
வாழைப்பழம்
ஊட்டசத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் நிம்மதியான தூக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தில் தசைகளுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால். இது இயற்கையாகவே உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும்.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட் சிறந்த தூக்கத்தை கொடுக்கும் உணவுகளில் ஒன்றாகும். இதில் செரோடோனின் உள்ளது. இது உங்கள் மனம் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தி நன்றாக தூக்கத்தை கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ