Insomnia: நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவ சில எளிய டிபஸ்!
தூக்கமின்மை பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
நல்ல தூக்கம் வேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் ஆசை. சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு, குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேஎண்டும் என பரிந்துரைக்கிறது. தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கத்தினால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலருக்கு சரியான நேரத்தில் தூக்கம் வராமல், காலையில் எழுந்திருக்கும் போது சோர்வாக உணர்கிறார்கள். சில எளிய வழிமுறைகள் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தாமதமான தூக்கத்திற்கான காரணம்
சிலருக்கு பகலில் உறங்கும் பழக்கம் இருக்கும்,இதன் காரணமாக இரவில் வெகுநேரம் தூக்கம் வராமல் இருக்கலாம். சிலர் இரவில் இருட்டில் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. அதன் வெளிச்சம் கண்களுக்கு தீங்கு விளைவித்து தூக்கத்தை பாதிக்கிறது.
மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
தூக்கமின்மையை விரட்ட உதவும் 5 உணவுகள்
ஒரு நபர் தூக்கமின்மையால் தொந்தரவு செய்தால், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம். படுக்கைக்கு செல்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன், சாப்பிட்டு விட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். இது தவிர, மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகளும் தூக்கமின்மையை போக்கும்.
1. வெள்ளை அரிசி உணவு
2. வெள்ளை பிரெட்
3. அன்னாசி மற்றும் தர்பூசணி
4. குக்கீஸ் மற்றும் கேக்குகள்
5. உருளைக்கிழங்கு சேர்த்த உணவு
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
சீக்கிரம் தூக்கம் வர 3 வழிகள்
1. பகலில் தூங்கும் பழக்கத்தை கைவிடுங்கள்
தூக்கமின்மையை போக்க, உங்கள் வாழ்க்கைமுறையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். பகலில் அதிக நேரம் தூங்காதீர்கள். இது இரவு தூக்கத்தை கெடுக்கும். உங்களுக்கு நிச்சயம் தூங்க வேண்டும் என நினைத்தால், பகலில் அரை மணி நேரம் மட்டுமே தூங்குங்கள்.
2. அறை வெப்பநிலையை சீராக பராமரிக்கவும்
உங்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால், அரையின் வெப்பம் சீராக இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை அதாவது, சூடாக இருந்தால், தூங்குவதில் சிக்கல்கள் இருக்கும்.
3. நேரத்தை அடிக்கடி பார்க்க வேண்டாம்
சிலருக்குத் தூங்கும் போது கடிகாரத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பதால், தூங்குவதற்கு இவ்வளவு நேரம் ஆகிறதே என மனதில் டென்ஷன் அதிகரிக்கும். இதனால், தூக்கம் வருவது இன்னும் தாமதமாகும்.
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR