ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகை மெருகூட்டும் பலாப்பழத்துடன் போட்டி போட வேறு பழம் உண்டா?
Jackfruit FACTS: பலா, பழமாக மட்டுமல்ல, ஒரு காயாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயாக பயன்படுத்தும்போது, அதிலுள்ள நார்ச்சத்து மிகவும் தரமானது, அனைவருக்கும் பலனளிப்பது
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், இந்த வகையில் வரும் வாழை மற்றும் மாம்ப்பழத்தைப் போலவே, எளிதாக விளைவது, தனது அனைத்து பாகங்களையும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் விருந்தாக கொடுப்பது. பலாவின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நாம் அனைவருமே பலாப்பழத்தை ரசித்து, விரும்பி சாப்பிடுவோம். இனிப்பான மற்றும் சுவையான பழமாக பலாப்பழம் கருதப்படுகிறது.
கோடை காலம் வந்தவுடன் சந்தையில் பலாப்பழங்கள் வரத் தொடங்கும். பலா, பழமாக மட்டுமல்ல, ஒரு காயாகவும் பயன்படுத்தப்படுகிறது. காயாக பயன்படுத்தும்போது, அதிலுள்ள நார்ச்சத்து மிகவும் தரமானது, அனைவருக்கும் பலனளிப்பது.
பலாவை பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளை நீண்ட பட்டியலாக சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில...
பலாப்பழம் ஏன் நன்மை பயக்கும்?
கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை), தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை) மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்ட பழம் பலாப்பழம்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் பலா
பலாப்பழ கொட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும்.
மேலும் படிக்க | பூண்டை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது? வறுத்தா இல்லை பச்சையாகவா?
பார்வைத் திறனை மேம்படுத்தும் பலா
பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளில் வைட்டமின் ஏ உள்ளது, இது பார்வைக்கு இன்றியமையாதது மற்றும் கண் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பலா
பலாப்பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பலாப்பழ விதைகளில் உள்ள நார்ச்சத்து, இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பலாப்பழ கொட்டையில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
சருமத்தை மெருகேற்றும்
பலாப்பழ விதைகளில் உள்ள வைட்டமின் சி, இது கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது மற்றும் ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
எடை இழப்புக்கு பலாப்பழக் கொட்டை
பலாப்பழ விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் என்பதால், எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலா
பலாப்பழத்தின் கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
புரதம் நிறைந்த பழம்
பலாப்பழ விதைகளில் நல்ல அளவு புரதச்சத்து இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புரதச்சத்து உணவாகும்.
வீக்கத்தைக் குறைக்கும்
ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்க உதவும்.
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
பலாப்பழத்தை யார் சாப்பிடக்கூடாது?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வாமை அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனை இருந்தால் பலாப்பழம் சாப்பிடக்கூடாது.
அதிகமாக உட்கொள்ளக்கூடாது
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால், பலாப்பழத்தை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அதிகப்படியான நுகர்வு காரணமாக சில பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு ஏன் பால் குடிக்கக்கூடாது?
பாலும் பலாப்பழமும் ஒன்றாக சேர்ந்தால், உடல் ஆரோக்கியம் கெட்டுப்ப்போகும். அதனால்தான் பால் குடித்த உடனே பலாப்பழம் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | முளை கட்டிய கோதுமை தோசை... எவ்வளவு குண்டாக இருந்தாலும் ஒல்லியாகலாம்..!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ