ப்ளாவ் வைரஸின் மூலம் பரவும் நோய் தான் இந்த ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ். இந்த நோய் பரவ காரணமாய் இருப்பது குயூலெக்ஸ் கொசு ஆகும். இது மூளையில் எரிச்சல், அழற்சியை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. இதன் நோயின் உச்சக்கட்டமாய், மூளையில் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது. என்சிபாலிட்டிஸ், ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய்கள் கடுமையான மூளை வீக்கம் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி பெரும்பாலாக குழந்தைகளை பாதிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் தடுக்க எப்படி:-


* ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் ஆபத்தை குறைக்க கொசு கடிக்காமல் முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.


* கொசு கடிக்காதவாறு கொசுவிரட்டி கிரீம்களை பயன்படுத்தவும். கொசு கடியில் இருந்து தப்பிக்க உடலை முழுவதுமாக மறைக்கும் உடையை அணிய வேண்டும்.


* நம் சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 


* நோய்த்தடுப்பு- பாதுகாப்பான ஜெஇ தடுப்பூசிகள் நோய் தடுக்கும். ஜெஇ தடுப்பூசி வைரஸ் அபாயத்தை குறைக்க உதவும். 


ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் வைரஸ் நோய் முதல் வழக்கு 1871 ஜப்பானில் ஆவணப்படுத்தப்பட்டது.