வெளியில் இருந்து முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் மக்கள் பெரும்பாலும் மிகவும் மென்மையான இதயம் கொண்டவர்கள் லிச்சிப் பழத்தை போன்றவர்கள். பலாப்பழம் என்று சொல்வதற்கு பதிலாக லிச்சிப் பழத்துடன் மனிதர்களின் குணத்தை ஒப்பிடலாம். பழம் மிகவும் சிறியதாகத் தோன்றினாலும், பெரும் நோய்களை போக்கும் திறன் கொண்ட லிச்சியில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால், வழக்கமான இதய தாளத்தை வழங்குகிறது. லிச்சியின் மயக்கும் நன்மைகளைப் பார்த்து, ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது, இந்த ஆராய்ச்சி, லிச்சி ஒரு அற்புதமான பழம் என்று கூறுகிறது,


உடல் பருமன், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் மற்றும் அல்சைமர் ஆகியவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. அதனால்தான் லிச்சியை நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாற்றுவது இப்போது மிகவும் அவசியமாகிவிட்டது.


லிச்சி பழம், அற்புதமான ஊட்டச்சத்து மதிப்புகளைக் கொண்டுள்ளது, இதில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் பி-காம்ப்ளக்ஸ் உள்ளது, இது நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், லிச்சி நம் உடலுக்கு இரத்த உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது RBC உருவாவதற்குத் தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவற்றை வழங்குகிறது.


மேலும் படிக்க | நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் ஏழு சூப்பர் உணவுகள்


லிச்சி பழத்தின் நன்மைகள் உண்மையிலேயே, வேறு எந்த பழத்துடன் ஒப்பிடமுடியாதது. உங்கள் முகத்தை அழகாக மாற்றும் திறன் லிச்சிக்கு உண்டு. இந்தப் பழத்தில் வயகும் உடலின் செயமுறையை மந்தபடுத்தும் பண்புகள் உள்ளன மற்றும் இது ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. 


இது உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்களை வழங்குவதன் மூலம் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. அழகுபடுத்தும் செயல்முறைக்கு மட்டுமின்றி, இந்த அதிசய பழம் சேதமடைந்த சருமத்தை விரைவாக மீட்டெடுக்கும். லிச்சி போன்ற ஒரு சிறிய பழத்தில் எப்படி இவ்வளவு பொக்கிஷங்கள் எப்படி வந்தது என்று ஆச்ச்சரியம் ஏற்படுகிறது.


பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள லிச்சி பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். எனவே, லிச்சி பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தசோகை நோய் ஏற்படாது. ஏனென்றால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதால், ரத்தசோகை ஏற்படும் அபாயம் குறைகிறது.



அது மட்டுமல்ல, உடல் எடையை துரிதமாக குறைக்க லிச்சி பழம் உதவுகிறது. லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே நம் உடலுள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த இனிப்புப் பழம் உதவுகிறது. 


நீர்ச்சத்து நிறைந்துள்ள லிச்சியை கோடையில் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த விரும்புபவர்கள், இந்த சிவப்பு பழத்தை சாப்பிட்டு அற்புத பலன்களைப் பெறலாம்.


கோடை காலத்தில் கிடைக்கும் லிச்சி ஒரு பருவகால பழமாகும். உடல் எடையை குறைக்க சிறந்த பழமான லிச்சி, உடலுக்கு குளிர்ச்சயையும் கொடுக்கிறது. வளர்சிதை மாற்றமும் வலுப்பெறுகிறது.


நார்ச்சத்து கொண்ட பழம்


லிச்சியில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்தும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.சரும பாதுகாப்பிற்கும் லிச்சி நன்மை பயக்கும். லிச்சி சாப்பிட்டால் சருமம் பளபளக்கும். லிச்சி சாப்பிடுவது ஒருவரின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, காதல் வாழ்க்கையை மேம்படுத்துகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ