புதுடெல்லி: குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூட்டுவலியில் இருந்து குணமடைய எளிய தீர்வுகளை:-


* தினசரி மூட்டுகளுக்கும் கால் விரல்களுக்கும் பயிற்சி கொடுத்து வர மூட்டுவலி மறையும்.


* யோகாசனங்களை தொடர்ந்து செய்து வர மூட்டுவலி மறையும்


* தினசரி ஒரு வேளை இயற்கை உணவினை உண்டு வர யூரிக் அமிலம் குறையும் மூட்டுவலி மறையும்.


* குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.


* கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.


* குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.