நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்ததற்கான முக்கிய காரணம் அவர்களுடைய உணவுப் பழக்கம்  என்றால் மிகையாகாது. இரும்பு, மண், கல் பாத்திரங்களில் சமையல் செய்யும் பழக்கம் இருந்தது. ஆனால், இந்த நவீனமயமான காலத்தில் நாம் இதை எல்லாம் மறந்து விட்டோம்.   இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்பதால்  ஏற்படும் நன்மைகள் ஏராளம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை அகற்ற பலர் இரும்பு பாத்திரத்தில் உணவை சமைக்கிறார்கள். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இரும்பு வாணலியில் சமைத்த உணவை தொடர்ந்து சாப்பிட்டால், உடலில் ஹீமோகுளோபின் அளவு மேம்படும். இரும்புப் பாத்திரத்தில் சமைப்பது நிச்சயம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதன் சிறப்பு குறித்து மாற்று கருத்து ஏதும் இல்லை. 


ஆனாலும், சில வகை உணவுகளை அதில் சமைப்பதால், உடலுக்கு கேடு ஏற்படும்.  அதனால் அது குறித்து அறிந்து கொள்வதும் முக்கியம். இரும்பு பாத்திரங்களில் உணவை சமைக்கும்போது மனதில் கொள்ள வேண்டியவை என்ன, சமைக்க கூடாத உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


ALSO READ | என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா; சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும்


 


- ஒருபோதும் இரும்பு பாத்திரத்தில் புளிப்பு உள்ள பொருட்களை சமைக்க கூடாது. புளிப்பு நிறைந்த பொருளை சமைக்கும் போது இரும்புடன் சேர்ந்து அவை வினை புரிகின்றன. அதனால், புளி, தக்காளி, எலுமிச்சை சேர்த்த உணவுகளை அதில் சமைக்க கூடாது. அதாவது ரசம் அல்லது சாம்பார் போன்றவற்றை இரும்பு பாத்திரத்தில் செய்யக் கூடாது.


- இரும்பு வாணலியில் பச்சை காய்கறியை சமைக்கும் போது, அதன் நிறம் கருப்பு நிறமாகிறது. பச்சை காய்கறிகளில் இரும்புச்சத்து உள்ளது. இரும்புடன் சேர்ந்து கருப்பு நிறமாகிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா என்பது சரியாக நிரூபிக்கப்படவில்லை. இரும்பு வாணலியில் உணவை சமைத்தால், சமைத்த பிறகு, உடனடியாக அதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி விடுவது நல்லது.


இரும்புக் பாத்திரத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உணவை சமைக்க வேண்டும். இரும்பு பாத்திரங்களை கழுவ மென்மையான சோப்பு பயன்படுத்தவும். இந்த பாத்திரங்களை கழுவிய பின் உடனடியாக ஒரு துணியால் துடைக்கவும் கடினமான ஸ்க்ரப்பர்கள் அல்லது இரும்பு கம்பியான் ஆன ஸ்கரப்பர்கள் ஆகிய இரண்டையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.


- இரும்புக் பாத்திரத்தைக் கழுவிய பின் அதில் சிறிது எண்ணெய் தடவ வேண்டும். அதனால் அது துருப்பிடிக்காமல் இருக்கும். மேலும், இரும்பு பாத்திரங்களை சுத்தமான மற்றும் ஈரப்பதம் இல்லாத இடங்களில் வைக்க வேண்டும்.


ALSO READ | தலைமுடிக்கு கண்டிஷனரை பயன்படுத்தும்போது செய்யும் பொதுவான தவறுகள்....


 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR