Benefits of Pumpkin: பரங்கிக்காய் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். கொரோனா காலத்தில், நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால்,  அதற்கு ஏற்ற காய் பரங்கிக்காய் ஆகும்.  உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், பரங்கிக்காய் வப்பிரசாதமாக உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. பூசணிக்காய் சாப்பிடுவது மழைக்காலத்திலும் குளிர் மற்றும் இருமலில் பெரும் நிவாரணம் கிடைக்கிறது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ, கரோட்டின் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், விரைவாக குணமடையவும் உதவுகின்றன.


உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் பரங்கிக்காயை பற்றி குறிப்பிடுகையில்,  பரங்கிக்காயில் காணப்படும் வைட்டமின்கள் பி மற்றும் பி 6, குறிப்பாக உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன என்கிறார்.


டாக்டர் ரஞ்சனா சிங் மேலும் கூறுகையில், , பூசணிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்பு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதை அனைவரும் அறிவோம். இரும்புச்சத்து குறைவாக இருப்பதால் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இதனால், உடல்சோர்வு, தலைச்சுற்றல், தோல் மற்றும் நகங்கள் vஎளிறி போதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது.


பரங்கிக்காயின் பிற நன்மைகள்


பரங்கிக்காயில் வைட்டமின் ஏ ஏராளமாகக் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் கண்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.


மேலும்,  பரங்கிக்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இரண்டிலும் நிறைந்துள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சக்திவாய்ந்த கலவையால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பரங்கிக்காயில் காணப்படும் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது.


ALSO READ:Skin Care Tips: கோடையில் உங்கள் பையில் இருக்க வேண்டிய 3 முக்கிய பொருட்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR