இன்றைய வாழ்க்கைமுறையில், மக்களின் உணவு பழக்கம் காரணமாக, உடலில் பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு ஏற்படுகிறது. வைட்டமின் பி 12 உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து டி.என்.ஏ சின் தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் பி12 தேவைப்படுகிறது. வைட்டமின் பி 12  குறைபாடு இருந்தால், அது பல சிக்கல்களை ஏற்படுத்தும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் பி 12 மிகவும் முக்கியம். உடலில் வைட்டமின் பி 12  குறைபாடு  காரணமாக ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகளைப் பற்றி நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விட்டிலிகோ (Vitiligo) - விட்டிலிகோ வெள்ளை புள்ளிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு நேர்மாறானது, இதில் உடலில் மெலனின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் வெள்ளை திட்டுகள் உருவாகின்றன. விட்டிலிகோ எனப்படும் வெள்ளை திட்டு பொதுவாக சூரிய ஒளி நேரடியாக படும் உடலின் பாகங்களில் ஏற்படுகிறது. வெள்ளை திட்டுகள் முகம், கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் அதிகம் ஏற்படுகின்றன.


ஏங்குலர் செலிடிஸ் (Angular cheilitis) - இது வைட்டமின் பி 12  குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோயாகும், இதில் வாயின் மூலைகளில் சிவத்தல் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. ஏங்குலர் செலிடிஸ் ஏற்படும் போது முதலில் வாய் முதலில் சிவந்து வீக்கம் ஏற்படுகிறது. கடுமையான தாக்கம் இருந்தால், விரிசல்களில் வலி, மற்றும் இரத்தப்போக்கு, வலி, எரிச்சல் ஆகியவை ஏற்படும்.


ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்


ஹைப்பர் பிக்மென்டேஷன்- ஹைப்பர் பிக்மென்டேஷனில், புள்ளிகள், திட்டுகள் அல்லது சருமத்தின் நிறம் கருமையாகிறது. இந்த இருண்ட திட்டுகள் உங்கள் முகத்தில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இருக்கலாம். சருமத்தில் மெலனின் நிறமி அதிகமாக உற்பத்தி ஆகத் தொடங்கும் போது இது நிகழ்கிறது. இது பொதுவாக முதுமை அல்லது நீண்ட நேரம் சூரியனில் இருப்பவர்களிடையே காணப்படுகிறது. உடலின் எந்தப் பகுதியிலும் பழுப்பு, கருப்பு புள்ளிகள் இருக்கலாம். ஹைப்பர்கிமண்டேஷனின் திட்டுகள், சூரிய ஒளியில் அதிகம் இருக்கும் போது மேலும் கருமையாகின்றன.


ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்


முடி உதிர்தல் பிரச்சினை- ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின் பி 12 ஊட்டசத்து, உடலில் போதுமான அளவு இருக்க வேண்டும். வைட்டமின் பி 12 குறைபாடு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. அதிக முடி உதிர்தல் விட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறியாக இருக்கலாம்


பிற அறிகுறிகள் - வைட்டமின் பி 12 குறைபாடு பலருக்கு வெளிர் தோல் நிறம், நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், தோலில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு, பலவீனமான கண்பார்வை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். வைட்டமின் பி 12 குறைபாடு உங்கள் மன வலிமை, செயல் திறனை குறைக்கும்


வைட்டமின் பி 12 இன் குறைபாட்டை  போக்க மருத்துவரின் பரிந்துரைப்படி, வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, நீங்கள் அசைவம் சாப்பிடும் நபர் என்றால், மீன், முட்டை, இறைச்சி ஆகியவற்றிலிருந்து வைட்டமின் பி 12  குறைபாட்டை  பூர்த்தி செய்யலாம். காய்கறியில் நீங்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் சாப்பிடலாம். இந்த வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு இயற்கையாகவே வைட்டமின் பி 12 கிடைக்கும்.


ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR