நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாகவே உணவுகளில் இரும்புச்சத்து இருக்குமாறு பார்த்து உண்டால் ரத்தசோகை ஏற்படாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல உணவுப் பொருட்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ள பலவிதமான உணவுகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. அவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலே போதும், ஹீமோகுளோபின் மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்களும் உடலில் சேரும்.


பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து அபாரமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த பேரீட்சை நரம்புத் தளர்ச்சி ஏற்படாமல் காக்கும். 


ALSO READ | Health Alert! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!!!


ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை ஏற்படாது.


ஆப்பிள் உடலின் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும். ஆப்பிளில் இரும்புச்சத்துடன், உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்கள் உள்ளன. தோலுடன் கூடிய ஆப்பிள் ஒன்றை தினசரி உண்டு வந்தால் உடல் நலம் எப்போதும் வளமாக இருக்கும்.


கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் ஆப்பிள் கலந்திருந்தால், அது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. தின்பண்டங்களில் ஆப்பிள் சேர்ப்பது என்பது சுவையூட்டவே. பழமாக சாப்பிடுவதை வேறு உருமாற்றி, அத்துடன் இனிப்பு உட்பட வேறு பல பொருட்கள் செரும்போது அதன் சத்துக்களும் மாறிவிடும். எனவே ஆப்பிளை, பழமாக தினசரி உண்டு வருவது உடல்நலத்தைக் காக்கும்.


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


ரத்த சோகையை சரிசெய்ய தேன் பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை விரைவில் குணமாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் தேன், உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும். தினமும் உணவில் தேன் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை நோய் எளிதில் குணமாகும். தேனை பானங்களுடன் சேர்த்தும் குடிக்கலாம். இஞ்சியும் தேனை கலந்து எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


கொட்டைப் பருப்பு வகைகளில் அக்ரூட் மிகவும் சிறந்தது. இதில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. ரத்த சோகை இருப்பவர்கள் அக்ரூட், பாதாம் ஆகிய உலர் கொட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் உலர் பருப்பு வகைகளில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயன் தருகின்றன.  


இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்துகள் கொண்ட மாதுளம்பழம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது.  ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். தினமும் ஒரு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படும் என்ற அச்சமே ஏற்படாது.


மாதுளம் பழம் மட்டுமல்ல, காய்ந்த மாதுளை விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் விதையை பொடியாக செய்துக் கொண்டு, அதில் இரண்டு தேக்கண்டி பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.


ALSO READ | வெரிகோஸ் வெயின் பாதிப்பா? கவலை வேண்டாம்! இதோ நிவாரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR