சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு மிகச் சிறந்த உனவு என்பதில் மாற்று கருத்து இல்லை. ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது ரத்தில் உள்ள சர்க்கரை சிறப்பாக கட்டுபடுத்தும். அதாவது, லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்  (Low Glycaemic Index Food) உணவு வகையைச் சேர்ந்தது. ஆரோக்கியமாக இருக்க, பெரும்பாலானோர் சாதாரண கோதுமை மாவுக்குப் பதிலாக பார்லி மாவு, தினை மாவு அல்லது ராகி மாவையே பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள், ராகியை சாப்பிடக்கூடாது. சிலருக்கு இதை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.


ராகியில் அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இயற்கையாகவே உங்களை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது, ஒற்றைத் தலைவலி நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது, எடையைக் குறைக்கிறது மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. ஆனால் இதில் சில தீமைகளும் அடங்கியுள்ளது. எந்தெந்த பிரச்சனைகளில் ராகியை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


சிறுநீரக பிரச்சினைகள்


உங்களுக்கு சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால் ராகியை உட்கொள்ள வேண்டாம். சிறுநீரக பிரச்சனையில் ராகியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.


ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!


தைராய்டு பிரச்சனை


ராகி சாப்பிடுவது தைராய்டு நோயாளிகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இதனை அதிக அளவில் தைராய்டு நோயாளிகளின் பிரச்சனையை அதிகரிக்கும்.


வயிற்றுப்போக்கு 


 ராகியில் காணப்படும் பல தனிமங்கள் காரணமாக, இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவை ஏற்படுத்தும். வயிற்றில் வாயு ஏற்படும் பிரச்சனை இருந்தால் ராகியை சாப்பிட வேண்டாம்.


மலச்சிக்கல் பிரச்சனை


மலச்சிக்கல் பிரச்சனையில் கூட ராகி சாப்பிடக்கூடாது. இது எளிதில் ஜீரணமாகாது, இதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR