கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். குரங்குக் காய்சல் என்றுஅழைக்கப்படும் கியாசனூர் வன நோயால் (Kyasanur Forest Disease (KFD)) 65 வயது மூதாட்டி இன்று உயிரிழந்தார். மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோயைத் தடுக்க தடுப்பூசி இன்னும் கிடைக்காததால், சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்தாபூர் நகருக்கு அருகிலுள்ள ஜித்தி கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் உடல்நிலை நேற்று மோசமானது. அந்தப் பகுதியில் நோய் பரவலை கண்டறிந்ததை அடுத்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுடன் சமீபத்தில் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. நோய் பரவல் காரணமாக நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் 103 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கமகளூரு மற்றும் ஷிவமொக்கா மாவட்டங்களில் தலா ஒருவர் என இருவர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போடுவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.


மேலும் படிக்க | பாடாய் படுத்தும் கொலஸ்ட்ராலை பட்டென்று கரைக்கும் தேன்! ஆனா கூட்டு சேர ஒரு பொருள் வேணும்!


விரைவில் தடுப்பூசி போடப்படும் என்று மாநில சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


குரங்கு காய்ச்சல் 


குரங்கு காய்ச்சல் என்பது வைரஸ் ரத்தக்கசிவு நோயாகும், இது மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் ஆபத்தானது. KFD இன் அறிகுறிகள் என்று பார்த்தால், திடீரென குளிர், காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்படும். ஆரம்ப அறிகுறிகளுக்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு பிரச்சினைகள் ஆகியவற்றுடன் கடுமையான தசை வலி ஏற்படலாம்.


தமிழ்நாட்டில் எச்சரிக்கை நடவடிக்கை


இந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து அதிக மக்கள் கர்நாடகாவுக்கு சென்று வருகின்றனர். எனவெ இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க | எகிறும் யூரிக் அமில அளவை அசால்டாய் குறைக்கும் பழங்களின் தோல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ