உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும்.


தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும்.


தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.


பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.


பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.


பேரீச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்துள்ளன.


பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும். குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன.


ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உள்ளது. அதில் குறிப்பா ஆ‌ண்மை‌த் த‌ன்மை அதிகரிப்பதற்காக பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு கடைசியில் உயிருக்கே ஆபத்து நேரிடுகிறது.


தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.


நல்ல உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.பேரீச்சம்பழங்களை வெயிலில் நன்றாக காயவைத்து, அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். 


தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டும், கூடவே பசும்பாலை அருந்தினால் இன்னும் நல்லது.


இப்படி தொடர்ந்து இரண்டு மாதம் செய்து வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.


இது, சத்துகள் நிறைந்த ஒரு பெட்டகமாகவே திகழ்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.