மும்பை: இந்திய மருத்துவர்கள் 31 வயதுடைய மனிதரிடமிருந்து 1.87 கிலோகிராம் மூளைக் கட்டியை அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது உலகிலேயே மிகப் பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் சந்த்லால் பால் (வயது 31). இவருக்கு தலையில் இன்னொரு தலையை போல் கட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அது பெரிய தொந்தரவாக இருந்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்த கட்டியை மருத்துவமனையில் காண்பித்துள்ளார். அதனை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.  


இந்த அறுவை சிகிச்சையானது மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நடை பெற்றுள்ளது. பத்து நாட்களாக அவரை பரிசோதித்து தலையில் இருந்த கட்டியை ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர் மருத்துவர்கள். பின்னர் ஏழு மணி நேரம் போராடி மருத்துவர் ரமேஷ் பர்மல் தலைமையிலான மருத்துவர் குழு, அந்தக் கட்டியை நீக்கியுள்ளது.


இதுபற்றி மருத்துவர் ரமேஷ் பர்மல் கூறும்போது.... 


   இது வித்தியாசமான கேஸ் என்றும், இது மிகவும் கடினமான அறுவைசிகிச்சை. எங்களுக்கு இது பெரிய சவாலாகா இருந்தது என்றும் கூறினார். நவீன முறையில் சிகிச்சை அளித்து கட்டியை கஷ்டப்பட்டு நீக்கியுள்ளோம். மருத்துவத்துறையில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு ஆபரேஷன்... என அவர் தெரிவித்தார்.