Low Glycemic Index Fruits for Diabetic Control: நீரிழிவு நோயாளிகள், சர்க்கரையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், உடல் உறுப்பு பாதிப்புகள் உட்பட, பல்வேறு வகையான, உடல்நல பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடலாம். பழங்கள் என்று வரும்போது, சர்க்கரை நோயாளிகள், அதை சாப்பிட தயங்குவார்கள். ஆனால், கிளைசிமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ள பழங்களை சேர்த்துக் கொள்வதால், நீரழிவு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அதோடு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த பழங்கள் உதவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ஆப்பிள்


ஆப்பிள் பழத்தை, சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இதன் கிளைசிமிக் குறியீடு 39 மட்டுமே. இதனை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதோடு, உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். கால்சியம் வைட்டமின்கள் உட்பட பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஆப்பிள், இதை ஆரோக்கியம் முதல், உடல் பருமனை குறைப்பது வரை, பல்வேறு ஆரோக்கிய நம் முன்னோர்களை அள்ளித் தருகிறது.


வாழைப்பழம்


வாழைப்பழத்தின் கிளைசெமி குறியீடு 31 மட்டுமே. எனவே நீரழிவு நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம். பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், நீரழிவு நோயை மட்டும் இன்றி, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும்.


தர்பூசணி


தர்பூசணி கோடை காலத்திற்கு ஏற்ற பழம். நீர்ச்சத்து நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், பலவித கோடைகால நோய்களிலிருந்து தப்பிக்கலாம். பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஆகியவை நிறைந்த தர்பூசணி பழத்தின் கிளைசிமிக் குறியீடு 54 மட்டுமே. எனவே நீரழிவு நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம். இதனால் பிற ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.


மேலும் படிக்க | weight loss: பக்கவிளைவுகள் இல்லாமல் பக்காவா எடை குறைக்க இதோ சூப்பர் டிப்ஸ்


செர்ரி


செர்வி பழங்களின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 20 மட்டுமே. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழம் என்று சுகாதார நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடென்ட்கள், பொட்டாசியம் நார்ச்சத்து நிறைந்த செர்ரி பழங்கள், பல தீவிர நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.


மேலே குறிப்பிட்டுள்ள பழங்களைத் தவிர, கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள வேறு சில பழங்களையும், நீரழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம், அதில் கிளைசெமி குறியீடு 53 என்ற அளவில் உள்ள திராட்சை, கிளைசெமிக் குறியீடு 40 என்று அளவில் உள்ள ஆரஞ்சு, கிளைசிமி குறியீடு 40 என்ற அளவில் உள்ள ஸ்ட்ராபெர்ரி, கிளைசிமிக் குறியீடு 35 என்ற அளவில் உள்ள மாம்பழம், கிளைசிமி குறியீடு 38 என்ற அளவில் உள்ள பேரிக்காய் போன்ற பழங்களையும் நீரழிவு நோயாளிகள் தாராளமாக உள்ளலாம். பழங்களில் இருப்பது பொதுவாகவே குளுக்கோஸ் அல்ல, எனவே பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று சுகாதார வல்லுனர்கள் கூறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... காரணம் என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ