திருமண வாழ்க்கையை குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு; அறிகுறிகள் இவை தான்!
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்: ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கும்.ஆனால் இது ஆண்களுக்கு அதிகம். ஆனால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். விந்தணு குறைதல், விறைப்புத் தன்மை குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இதில் அடங்கும்.
உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் பற்றாக்குறையால் ஆண்களுக்கு என்ன நடக்கும் என்பதை இங்கே கூறுவோம்? மற்றும் அதன் அறிகுறிகள் என்ன.
டெஸ்டோஸ்டிரோனின் செயல்பாடு
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலுறவுக்கான ஆசையை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை சரியாக வைத்திருப்பதோடு, தாடி, மார்பில் உள்ள முடி போன்ற ஆண்களின் உடலில் தோன்றும் முடி வளர்ச்சிக்கு உதவி, எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையும் போது தோன்றும் அறிகுறிகள்
1.உடலில் முடி வளர்ச்சி குறையும்
ஆண்களின் உடலில் தாடி-மார்பு போன்ற முடிகள் அதிகம் இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் குறைவதால், இந்த முடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது இயற்கை.
மேலும் படிக்க | Men's Health: ஆண்கள் பூசணி விதிகளை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்
2. உடலுறவில் நாட்டமின்மை
டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாலியல் தூண்டுதல் மிக குறைவாக இருக்கும். செக்ஸ் மீது ஈர்ப்பு குறைவாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் விந்தணு உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.
3. தசைகள் பலவீனமடைதல்
ஒரு நபருக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் குறைபாடு இருந்தால், தசைகள் பலவீனமடைகின்றன.
4. எலும்புகள் பலவீனமடைதல்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு உள்ள ஆண்களின் எலும்புகளும் பலவீனமடையத் தொடங்குகின்றன. இது தவிர எலும்பு தொடர்பான நோய்களும் வரலாம்.
5. உடல் பருமன்
டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே உங்கள் உடல் பருமனை புறக்கணிக்காதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ