காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன!
உலக நாடுகள் பலவற்றில் ஆயிரண்ணக்கான ஆண்கள் பலவீனமான விந்தணு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என்பது சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் உலக நாடுகளில் பலவற்றில், ஆண்கள் பலருக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு உள்ள நிலையில், நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த குறைபாட்டிற்கான காரணம் அறிய அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
பலவீனமான விந்தணு உள்ள பிரச்சனை நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஏனெனில் அதன் தொடர்பும் உங்கள் நகரத்துடன் உள்ளது. சீன ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில், அதிக மாசு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | Sperm Donation: விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்..!!!
மேலும், அமெரிக்காவில் முன்னதாக நடத்தப்பட்ட ஆய்விலும், வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் வாழும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 1970 களில் இருந்து குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், காற்று மாசுபாடும் ஒரு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம் என்கின்றன ஆய்வுகள். மன அழுத்தம் அதிகம் உள்ள சூழ்நிலைகளில், மூளை என்பது பாலின உறுப்புகளுடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ள நிலையில், கருவுறுதல் மற்றும் விந்தணு எண்ணிக்கையை மாசுபாடு பாதிக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காற்று மாசுபாடு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூளையின் மீதான இந்த தாக்கம் விந்தணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | Men's Health: ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்
ஜமா நெவொர்க் ஓபன் என்ற இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், சீனாவில் 130 இடங்களில் ஆண்களின் ஆரோக்கிய நிலை குறித்த தகவல்களை சேகரித்துள்ளது. சுமார் 34,000 ஆண்கள் ஆயுவுக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவர்கள் அவர்களின் விந்தணு எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அடர்த்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். ஆய்வில் பங்கேற்ற்றவர்கள், அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள காற்று மாசுபாட்டின் அளவை அடிப்படையாகக் கொண்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
காற்று மாசுபாட்டின் காரணமாக விந்தணுவின் இயக்கம் பலவீனமடைகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. விந்தணு வளர்ச்சி அடையும் கால கட்டத்தில் அதிக அளவு மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் உடல் நல பாதிப்புகள் விந்தணு இயக்கத்தை பாதிக்கிறது என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், காற்று மாசுபாடு நேரடியாக விந்தணுக்களை பாதிக்கிறது என்று ஆய்வில் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வினோத வழக்கு: இறந்த மகனின் விந்தணுவை திருப்பித் தருமாறு மருமகளிடம் கேட்கும் மாமியார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR