டெக்கோனன் (மெக்ஸிக்கோ): வெறும் 10 மாதங்களில் 27 கிலோ எடையினை பெற்றுள்ள, மெக்ஸிகன் குழந்தை ஒன்று உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதிக்கப்பட்ட குழந்தையின் அசாதாரண வளர்ச்சிகான காரணத்தை மருத்துவர்களால் கண்டறிய இயலவில்லை, எனவே சிகிச்சை மூலம் தற்போது அவருடைய வளர்ச்சியினை மருத்துவர்கள் தடை செய்து வைத்துள்ளனர்.


லூயிஸ் மானுவல் கோன்செலேஸ் சிகிச்சையின்றி டாக்டர்கள் அவரது பிறந்ததிலிருந்து ஏன் எடை குறைந்துவிட்டார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.


மெக்ஸிக்கோவின் டெக்கோனன் பகுதியை சேர்ந்த 10 மாத குழந்தை லூயிஸ், தனது பிறப்பின் போது 3.5 கிலோ எடையுடன் உலகிற்கு வந்தார். ஆனால் தற்போது இவர் அசாதாரன வளர்ச்சியால் சுமார் 27 கிலோ எடையினை அடைந்துள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தினை மருத்துவர்களார் கண்டறிய முடியவில்லை!


அவரது குடும்பத்தில் இதுபோன்ற பிரச்சனை எவருக்கு வரவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவரது மூன்று வயது சகோதரர் மரியோ சாதாரணமாக எடையுடனே காட்சியளிக்கின்றார்.


இதனால் லூயிஸ்-ன் எடை மாற்றம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. என்றபோதிலும், மருத்துவர்கள் அவர் மெக்ஸிக்கோவில் பரவலாக பரவி வரும்உடல் பருமன் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.


மரபணு கோளாறு காரணமாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழலாம் எனவும் கருத்துக்கள் மருத்துவர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றது.