உடல் ஆரோக்கியத்தில் பாலின் பங்கு: இந்திய உணவுகளில் பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கு பால் மிகவும் முக்கியமானது. கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பாலில் உள்ளன. இருப்பினும், உடல் எடையை குறைக்க அல்லது டயட்டிங் செய்ய விரும்புபவர்கள், முதலில் தங்கள் உணவில் இருந்து பாலை முதலில் நீக்கி விடுகிறார்கள். இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. பால் அருந்துவதன் மூலமும் உடல் பருமனை குறைக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் பருமனை குறைக்க உணவில் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள்


பால் பொருட்கள் உடல் எடையை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இருப்பினும், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பால் பொருட்களில் கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (சிஎல்ஏ) உள்ளது. இது உடல் பருமனை தடுக்கிறது. இதனால் உடல் பருமன் குறைகிறது.


- பால் புரதம் நிறைந்த உணவு. 1 கப் பாலில் சுமார் 8.14 கிராம் புரதம் உள்ளது. புரோட்டீன் உணவை உட்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் பசி இருக்காது. மேலும் ஹார்மோன்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. பால் உடலில் கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.


மேலும் படிக்க | முகப்பரு இருக்கா? அப்போ இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம் 


- பாலில் குறைந்த கலோரிகள் இருப்பதால், எடையை குறைக்க எண்ணும் போது அதை உட்கொள்ளலாம். கொழுப்பு இல்லாத பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிடலாம். இதனால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், உடல் பருமனும் குறையும்.


- உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பால் உதவுகிறது. இது எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும். பால் புரதம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது என்று பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.


- பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வைட்டமின் ஏ, டி, கே, ஈ மற்றும் பல தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. பாலில் பாஸ்பரஸ், மெக்னீசியம், நைட்ரஜன், அயோடின் மற்றும் இதர சத்துக்கள் உள்ளன. 


- பால் புரதம், லாக்டோஸ் மற்றும் வைட்டமின் பி-2, கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இந்த கூறுகள் அனைத்தும் எடையைக் குறைக்க உதவுகின்றன.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சிறுநீரக கல் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த காய்கறிகள் பக்கம் போகாதீங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ