உங்கள் கண் இமைகள் உதிர்ந்து போகின்றனவா? இமைகள் அடர்த்தி குறைவாக உள்ளனவா? கவலை வேண்டாம். வீட்டில் உள்ள சாதாரன பொருட்களை கொண்டு கண்களில் உள்ள இமைகளை அடர்த்தியாக மாற்ற சில டிப்ஸ்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யவேண்டியவை:-


1. விட்டமின் E (Vitamin E) காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் தேய்க்க வேண்டும்.


ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்


2. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் (Olive Oil) மற்றும் ஈமு எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை (Eye Lashes) முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 


3. சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். 


4. ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.


5. விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை தினமும் இரவில் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.


6. வாசலினை மஸ்காரா பிரஷின் மூலம் கண் இமைகளின் மேல் பிரஷ் செய்ய வேண்டும். இது கண் இமைகளை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரச் செய்யும். 


7. தேங்காய்ப் பாலை பஞ்சில் ஊரவைத்து கண்களின் மேல் வைக்கவும். இது கண் இமைகளுக்கு தேவையான மிருதுத்தன்மையையும் அடர்த்தியையும் கொடுக்கும்.


ALSO READ | பாதம் வெடிப்பு நீங்க சில இயற்கை வழி டிப்ஸ்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR