திரும்பவும் முதலில் இருந்தா.... 27 நாடுகளில் பரவி வரும் XEC வகை கொரோனா வைரஸ்
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த `XEC` எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று மீண்டும் தொடங்கி விட்டதோ என அஞ்சும் வகையில், தற்போது உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான XEC உலகம் முழுவதும் 27 நாடுகளில் பரவி வருவது குறித்து வல்லுநர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய வகை XEC கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று பரவி வருகிறது. கொரோனாவின் ஒமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள்.
XEC வகை கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது?
ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வரும் XEC விரைவில் தீவிரமாக பரவும் மாறுபாடாக உருவாகக்கூடும் என வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு பரவும் ஆபத்து அதிகரிக்கலாம் என்றும், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள், புதிய மாறுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தால், தொற்று பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் மீண்டும் உலகம் முடங்கும் வகையில், புதிய கோவிட் அலையை இந்த வைரஸ் ஏற்படுத்தக் கூடும் என்றும் வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
ஒமிக்ரானின் KS.1.1 மற்றும் KP.3.3 ஆகிய இரண்டு துணை வகைகளின் கலவை
கொரோனாவின் இந்தப் புதிய திரிபு ஒமிக்ரானின் KS.1.1 மற்றும் KP.3.3 ஆகிய இரண்டு துணை வகைகளின் கலவையான வடிவமாக இருக்கும் சூழ்நிலையில், இந்த புதிய மாறுபாடு வீரியம் மிக்கதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வல்லநர்களின் இந்த எச்சரிக்கை காரணமாக, அமெரிக்காவில் தனி மனித கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
XEC வகை கொரோனா தொற்றின் அறிகுறிகள்
காய்ச்சல் மற்றும் சளி தவிர, கடுமையான உடல்வலி, சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் கொரோனாவின் XEC வகை புதிய மாறுபாட்டின் சில அறிகுறிகளாகும். மேலும், சுவாசிப்பதில் சிரமம், தலைவலி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையும் காணலாம். முந்தையை கொரோனா தொற்று காலத்தில், தொற்று பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலானோர், சில வாரங்களில் குணமடைந்தனர். ஆனால் புதிய வகை மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
XEC கொரோனா பரவை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
கொரோனாவின் XEC மாறுபாடு பரவலை தடுக்க, தடுப்பூசி போடுவதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இது தவிர, முந்தைய கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நெரிசல் மிகுந்த இடத்தில் முகமூடி அணிய வேண்டும், சரியான சமூக இடைவெளியைப் பேண வேண்டும், தூய்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.
மேலும் படிக்க | நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி... பள்ளி, கல்லூரிகள் மூடல் - கட்டுபாடுகள் விதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ