இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மும்பையில் உள்ள தாராவி பகுதி, ஒரு சமயத்தில் கொரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக விளங்கியது. அங்கே கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் மும்பை (Mumbai) தாராவியில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக. புதிதாக கொரோனா வைர்ஸ் தொற்று பாதிப்பு பதிவாகவில்லை. ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இருக்கும் தாராவியில் இன்று ஒரு கொரோனா நோயாளி கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மும்பை  தாராவியில் 2.5 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 6,50,000 பேர் வாழ்கின்றனர். இதிலிருந்து அது எவ்வளவு மக்கள் தொகை நெரிசலான பகுதி என்பதை அறிந்து கொள்ளலாம். இது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் (Corona Virus) முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது எனலாம். மும்பை மக்கள் இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


மும்பை தாராவியில் முதல் கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி கண்டறியப்பட்டது.


மகாராஷ்டிராவில் (Maharashtra) வியாழக்கிழமை 3,580 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மொத்த பாதிப்பு 19,09,951 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 89 புதிய உயிரிழப்புகளுக்குப் பிறகு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,000 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 20 நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 என்ற அளவை தாண்டவில்லை. 


மாநில தலைநகர் மும்பையை பொறுத்தவரை, 643 புதிய பாதிப்புகள் பதிவாகி, மொத்த எண்ணிக்கை 2,89,204  என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்12 பேர் இறந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 11,045 ஆக உள்ளது. 


ALSO READ | உலகளாவிய கவனத்தை ஈர்த்த இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி: ICMR


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR