பச்சை கொத்தமல்லியில் இவ்வளவு மருத்துவ குணங்களா
கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
புதுடெல்லி: காய்கறிகளுடன் பச்சை கொத்தமல்லி சேர்ப்பது ஒரு பாரம்பரியம். கொத்தமல்லி காய்கறியின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதன் தோற்றத்தையும் சிறப்பு செய்கிறது.
பச்சை கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
பச்சை கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நமது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுடன் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வாருங்கள், கொத்தமல்லியின் 5 நன்மைகள் பற்றி இன்று பார்ப்போம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!
1. கல்லீரல் நோயில் நன்மை பயக்கும்
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கொத்தமல்லி இலைகளில் போதுமான அளவு ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. பிட்டா கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த இந்த கொத்தமல்லி உதவுகின்றன.
2. செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு நன்மை
கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பில் ஏற்படும் பிறச்சனைகள் மற்றும் குடல் நோய் போன்றவை சரியாகிவிடும். இதன் காரணமாக உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, பசியும் நன்றாக எடுக்கும்.
3. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கொத்தமல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கின்றன. கொத்தமல்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
4. இதய நோய் வராமல் தடுக்கிறது
கொத்தமல்லியை உட்கொள்வதால், உடலில் இருந்து தேவையில்லாத கூடுதல் சோடியம் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இதன் காரணமாக உடல் உள்ளிருந்து கட்டுக்கோப்பாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் இதன் நுகர்வு உதவுகிறது.
5. குறைந்த இரத்த சர்க்கரை அளவு
கொத்துமல்லி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணங்களை கொண்டு உள்ளதால், நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் வாய்ப்புகள் அதிகம். கொத்தமல்லியில் உள்ள பண்புகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை நீக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR